"க்ளூக்"கென சிரித்த மேயர் பிரியா.. டக்கென திரும்பி பார்த்த சேகர்பாபு.. நடுவே தயாநிதி வேற.. என்னாச்சு
சென்னை மேயர் பிரியாவின் சிரிப்பு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது
சென்னை: மேயர் பிரியா கொல்லென்று சிரிக்கும் வீடியோ ஒன்று, சென்னைவாசிகளை இன்றைய தினம் ஈர்த்து வருகிறது.. அப்படி என்ன நடந்தது?
கடந்த சில தினங்களாகவே, சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் தலைதூக்கி உள்ளது.. இக்கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.
அதனை விசாரிக்க அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு இன்றும், நாளையும் விசாரிக்கும் என முன்னதாக கூறப்பட்டு இருந்தது. அப்படியெல்லாம் விசாரிக்க கூடாது என்று தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஸ்டாலின் உத்தரவு
தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து தீட்சிதர்களை சந்தித்து அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார்.. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சேகர்பாபு சொன்னதாவது: மாண்புமிகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதல் என்னவென்றால், இந்து சமய அறநிலையத்துறையை பொறுத்தவரை, பக்தர்கள், அர்ச்சகர்கள், பொதுமக்கள் அனைத்தும் சட்டத்தின்படிதான் நடக்க வேண்டும் என்பது அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று..

சமத்துவம் + சமதர்மம்
அதேபோல பக்தர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும், இறை அன்பர்களுக்கும் கோயிலை நிர்வகிக்கின்ற கோயில் நிர்வாகிகளுக்கும், எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்பது முதல்வரின் உறுதியான, அவர் மேற்கோள் காட்டியிருக்கின்ற வழிவகைகள். அதிலும் இன்னார், இனியவர் என்று பார்க்காமல், அனைவரும் பொதுவானவர்கள்.. சமத்துவம் + சமதர்மம் என்ற சொற்களுக்கு ஏற்பதான் திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது..

நீதிபதி கவுல்
நடராஜர் கோயிலை பொறுத்தவரை, ஏற்கனவே நீதிமன்றத்தின்படி அது பொதுக்கோயில் என்றுதான், உயர்நீதிமன்றத்தில் 1933-ம் ஆண்டாக இருந்தாலும் சரி, 1939-ம் ஆண்டாக இருந்தாலும் சரி, 1951-ம் ஆண்டாக இருந்தாலும் சரி, உயர்நீதிமன்ற தலைமை நீதியாக இருந்த கவுல் அவர்கள் பிறப்பித்த உத்தரவாக இருந்தாலும், சரி, சிதம்பரம் நடராஜர் கோயிலை பொறுத்தவரை, அது பொதுக்கோயில் என்றுதான் நீதிமன்ற தீர்ப்பு வரப்பெற்றிருக்கிறது என்றார்.

ஜோக் அடித்த சேகர்பாபு
சேகர்பாபு தந்த பேட்டியின்போது, திமுக எம்பி தயாநிதிமாறன், சென்னை மேயர் பிரியா, மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.. பேட்டியின் துவக்கத்தில், சிதம்பரம் கோயில் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு சேகர்பாபு "அதுக்கு பெயரே சிதம்பர ரகசியம்தானே" என்று கமெண்ட் அடித்தார்.. இதைக் கேட்டதும், பக்கத்தில் நின்றிருந்த மேயர் பிரியா, க்ளூக்கென வாய்விட்டு சிரித்துவிட்டார்..

குழந்தை - மேயர்
சென்னை மாநகராட்சி மேயராக பலர் போட்டி போட்ட நேரத்தில், 28 வயது பெண்ணான பிரியா மேயராக அறிவிக்கப்பட்டார்... பிரியா மேயராக பதவியேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்திக்கும் போதெல்லாம் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட சீனியர்கள் அவருக்கு அருகிலேயே இருந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தனர்.. அமைச்சர் சேகர்பாபு ஒருமுறை, "அவருக்கு பேச தெரியாது. அவர் ஒரு குழந்தை" என்றார்.. வயது எதுவானாலும், மதிப்பிற்குரிய பதவிக்கு வந்துவிட்டவரை, சேகர்பாபு இப்படி சொன்னது பரபரப்பாக பேசப்பட்டது.

சலசலப்புகள்
அதேபோல, மேயர் பிரியா செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதெல்லாம், பல நேரங்களில் விஷயம் தெரியாமல் திணறியதாகவும் சொல்லப்பட்டது.. அப்படித்தான் அம்மா உணவகம் குறித்து ஏடாகூடமாக பேசி சலசலப்புகளில் சிக்கினார்.. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது.. இதற்கு பிறகுதான்,செய்தியாளர் சந்திப்புகளுக்கு வருவதை பெரும்பாலும் பிரியா தவிர்த்து வந்ததாகவும் சொல்லப்பட்டது.. இப்படி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்து, இப்போது வரை தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார் பிரியா.. எனினும், மிக பொறுப்புடன் சென்னையின் நலனில் அவர் காட்டி வரும் அக்கறை, பரவலாக வரவேற்பை பெற்று வருவதையும் மறுக்க முடியாது..!












Click it and Unblock the Notifications