சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீபாம்மாவை காணோமே.. ஒருவேளை 4வது அணியை ரெடி பண்ணி கொண்டிருக்கிறாரா?

அதிமுகவுக்கு ஜெ.தீபா பிரச்சாரம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக-வுக்காக பிரச்சாரம் செய்யப்போகிறாரா தீபா?- வீடியோ

    சென்னை: திமுக-காங்கிரஸ் நச் கூட்டணி, அதிமுக-பாமக மெகா கூட்டணி, கமல் கொளுத்தி போட்ட 3-வது அணி, விஜயகாந்த்தின் பிடிவாதம் இவற்றின் நடுவில் எல்லோரும் சேர்ந்து ஜெ.தீபாவை மறந்துவிட்டார்கள்!

    ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா பற்றி, ஜெயலலிதா இறந்தபிறகுதான் நிறைய விஷயங்கள் தெரியவந்தன. குறிப்பாக சர்ச்சைகளாலேயே ஃபேமஸ் ஆனவர்தான் தீபா. ஒரு கட்சியை ஆரம்பித்த உடனேயே அலப்பறை என்றால் அது தீபாவின் 'எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை' என்ற அமைப்புதான்.

    பொறுப்பாளர்கள் நியமனத்தில் கணவன் மாதவனுக்கும் தீபாவுக்கும் ஸ்டார்ட் ஆன சண்டை... மாதவன் தனியே பொறுப்பாளர்கள் பட்டியலை வெளியிட.. பிறகு மாதவன் ஒரு தனிகட்சியை தொடங்க... 'தீபாவை முதல்வராக்குவதே தனது கட்சியின் நோக்கம்' என்று சொல்லிவிட்டு, மீண்டும் தீபாவுடன் இணைய.. இதற்கு நடுவில்தான் கார் டிரைவர் ராஜா பிரச்சனை வெடிக்க.. இப்படித்தான் தீபா ஃபேமஸ் ஆனார்.

    மாதவன்

    மாதவன்

    சில தினங்களுக்கு முன்பு இவரை பற்றின 2 தகவல்கள் வெளிவந்தது. ஒன்று, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் துணை பொதுச்செயலாளராக மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது. மற்றொன்று, அதிமுகவுக்கு தன்னுடைய ஆதரவு என்றது.

    தொகுதி பங்கீடு

    தொகுதி பங்கீடு

    ஆனால் இதற்கு பிறகு தீபாவை காணவில்லை. என்ன ஆனார், என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. எல்லோரும் கூட்டணி, தொகுதி பங்கீட்டில் பிசியாக இருக்கும்போது, சத்தமே இல்லாமல் இருக்கிறது தீபா பேரவை. அந்த பேரவையின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டவரும் தேர்தல் சம்பந்தமாக ஒன்றும் சொல்லவில்லை.

    கார் டிரைவர் ராஜா

    கார் டிரைவர் ராஜா

    கட்சி ஆரம்பித்து ஒரு வருஷம் ஆக போகிறது, ஆனால் இதுவரை கட்சி ரீதியான செயல்பாடுகள் என்ன என்று தெரியவில்லை. இதுவரை பேரவையில் தீபா, கணவன் மாதவன், கார் டிரைவர் ராஜா என 3 பேரை தவிர வேறு பெயர்களை இதுவரை யாரும் கேள்விப்பட்டதே இல்லை.

    4-வது அணி?

    4-வது அணி?

    அதிமுகவுக்கு ஆதரவு என்றால் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட போகிறாரா தீபா? கமல் 3-வது அணி என்பதுபோல தீபா 4-வது அணியை சைலண்ட்டாக உருவாக்கி கொண்டிருக்கிறாரா? அப்படியானால் இதில் யார் யார் இணைய வாய்ப்புள்ளது? யாருக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும்? எனக்கு 20 உனக்கு 20 என்று உடன்படிக்கை கையெழுத்தாகுமா? என்பதெல்லாம் தெரியவில்லை.

    நோட்டா

    நோட்டா

    ஆனால் தீபாவுடன் அணி சேர வீரலட்சுமி உள்ளிட்ட பலர் காத்திருப்பார்கள். எனவே இவர்கள் அனைவரும் சீரியஸாக ஒன்று கூடி ஒரு அணி அமைத்துப் போட்டியிட்டு நோட்டாவை வீழ்த்த தீவிரமாக முயற்சிக்கலாம்.. நல்லது நடந்தா நல்லதுதானே. இப்படியே இருந்தால் பேரவையின் நிலை என்ன? பேரவை உறுப்பினர்களின் கதி என்ன? எதாச்சும் ஒரு முடிவை எடுங்கப்பா!!

    English summary
    MGR Amma Deepa Peravai Deepa may have a chance to campaign for ADMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X