திருவள்ளூர் மாணவி தற்கொலை! மேலிடத்திலிருந்து பறந்த உத்தரவு! கீழச்சேரிக்கு வண்டியை விட்ட அமைச்சர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் திருவள்ளூரிலும் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சம்பவம் நடந்த பள்ளிக்கு விரைந்துள்ளார்.

Recommended Video

    Thiruvallur School Hostel-ல் +2 மாணவி தற்கொலை... மக்கள் சாலை மறியல் *Tamilnadu

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னம் சேலம் கணியமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி கடந்த 13 ஆம் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் இருந்து கீழே குறித்து தற்கொலை செய்து கொண்டார்.

    மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் பள்ளி சூறையாடப்பட்டது இந்த நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகள் போராட்டங்கள் பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு 10 நாட்களுக்குப் பிறகு நேற்று மாணவியின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

    மீண்டும் அதிர்ச்சி

    மீண்டும் அதிர்ச்சி

    கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருத்தணி தக்கள் ஒரு பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்வதற்காக புறப்பட்ட அவர் பள்ளிக்குச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

    திருவள்ளூர் மாணவி தற்கொலை

    திருவள்ளூர் மாணவி தற்கொலை

    அப்போது தனியாக இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மாணவி தற்கொலை செய்பவன் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருவள்ளூர் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பள்ளி நிர்வாகிகள் மற்றும் விடுதி கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உறவினர்கள் போராட்டம்

    உறவினர்கள் போராட்டம்

    இந்த நிலையில் மாணவி இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் தங்களுக்கு இதுகுறித்து உரிய தகவல் தெரிவிக்கவில்லை எனக் கூறி மாணவியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டும் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் போல் இவ்விவகாரம் பெறுதாகி விடக்கூடாது என்பதற்காக இந்த வழக்கின் விசாரணையானது சிபிசிஐடி காவல் துறையினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    இதனிடையே பள்ளி மாணவி மரணம் அடைந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கீழச்சேரிக்கு விரைந்துள்ளார். தற்போது தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்துவதுடன் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்துவார் எனக் கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+