பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்.. எத்தனை பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல்?
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்த தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்களை யாரும் பெறவில்லை. அதே நேரத்தில் எத்தனை பேர் எந்த ரேஞ்சில் மதிப்பெண்களை பெற்றனர் என்பது குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 தேர்வு நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வின் மதிப்பெண்களை வைத்துதான் உயர்கல்வியில் மாணவர்கள் சேர முடியும் என்பதால் இந்த தேர்வில் மதிப்பெண்ணை கணக்கிட தனி முறையை பள்ளிக் கல்வித் துறை கையாண்டது.

அதன்படி 8 லட்சத்து 18 ஆயிரம் மாணவ மாணவியரின் மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
அப்போது அவர் கூறுகையில் யாரும் 600- 600 மதிப்பெண்களை பெறவில்லை. பள்ளிக்கு வராத 1656 பேர் தேர்ச்சி பெறாதவர்களாகவே அறிவிக்கப்படுகிறார்கள். மதிப்பெண்ணில் திருப்தி இல்லாவிட்டால், பிளஸ் 2 தேர்வை மாணவர்கள் எழுதலாம். அவர்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தேர்வு நடத்தப்படும்.
முதல்முறையாக தசம எண் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிட்டு வெளியிடப்பட்டுள்ளன. 551 முதல் 600 வரை 39,679 மாணவர்களும், 501- 550 வரை 1,67,133 மாணவர்களும், 451- 500 வரை 2,22,522 மாணவர்களும் 401 முதல் 450 வரை 2,08,015 மாணவர்களும் 351 முதல் 400 வரை 1,19,579 மாணவர்களும் பெற்றனர். ஜூலை 22 ஆம் தேதி மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றார்.












Click it and Unblock the Notifications