17,000 பேருக்கு டெங்கு.. 4,619 பேருக்கு உண்ணி காய்ச்சல்.. அருண்ராஜ் அதிர்ச்சி ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. டெங்கு காய்ச்சல் அதிகளவு பரவுகிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியவாதற்குள் தற்போது உண்ணி காய்ச்சல் பரவி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போதுவரை 17,000 பேர் டெங்கு காய்ச்சலிலும், 4,619 பேர் உண்ணி காய்ச்சலிலும் பாதிக்கப்பட்டதாக அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு கொசு உற்பத்தி செய்யும் பொருட்களை ஆய்வு செய்து அகற்றியுள்ளோம். மக்களும் மழைநீர் தேங்காமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடந்தாண்டை விட இந்த ஆண்டு டெங்கு பரவல் கட்டுக்குள் உள்ளது.

minister-arunraj-shocking-report-on-dengue-scrub-fever

டெங்கு சர்வே

தமிழகத்தில் கடந்த காலங்களில் கொசு ஒழிப்பு, டெங்கு கட்டுப்பாடுக்கு சிறப்பாக மேற்கொண்ட நடவடிக்கை இந்தாண்டு நிச்சயம் பின்பற்றப்படும். மாநகராட்சிகளில் இந்த பணியில் தொய்விருப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். மாநகராட்சி ஆணையர்கள், உள்ளாட்சி பிரநிதிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டசபையிலேயே டெங்கு குறித்து அறிவித்துள்ளோம். கொசுக்கடியில் இருந்து தற்காப்பதற்காக ஒரு ஆய்வு செய்யப்படும். அக்டோபர் இரண்டாவது வாரத்தில் இந்த ஆய்வு பணி தொடங்கும்.

கொசு ஒழிப்பு பணியில் மக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வீட்டின் அருகே நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். உடம்பில் தடவிக் கொள்ளும் கொசு விரட்டிகளால் பயன் உள்ளதா என்பதை ஆய்வு செய்யவுள்ளோம். அது உண்மையில் சரியாக பயனளிக்கிறது என்றால் பொது சுகாதாரத்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்தாண்டு போல இந்தமுறையும் ஜீரோ சர்வேயும் செய்யப்படுகிறது.

உண்ணி காய்ச்சல்

அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 3 மாணவர்கள் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக தகவல் பரவுகிறது. அவர்கள் டெங்கு காய்ச்சலால் உயிரிழக்கவில்லை. உண்ணி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு மாணவர் உயிரிழந்தார். உண்ணி பூச்சி கடிப்பதால் வரும் பாதிப்பு அது. அதன் அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்றவை எல்லாமே டெங்கு போல தான் இருக்கும். கடிபட்ட இடத்தில் தழும்பு இருக்கும்.

அதை வைத்து அந்த காய்ச்சலை உணர வேண்டும். பூங்காக்கள், செடிகள் உள்ள இடங்களுக்கு செல்லும்போது பூச்சி கடிக்க வாய்ப்புள்ளது. தழும்பும், காய்ச்சலும் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் பரிசோதனை செல்லும். கடந்தாண்டு 5,142 பேர் உண்ணி காய்ச்சலில் பாதிக்கப்பட்டனர். இந்தாண்டு 4,619 பேர் உண்ணி காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கடமை பட்டுள்ளோம்.

பொதுசுகாதாரத்துறை இயக்குநர் மூலம் இந்த காய்ச்சல் எப்படி பரவுகிறது, அதன் அறிகுறி என்ன என்பது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளோம். வாக்கிங் செல்லும்போது கைக்கால்களில் முழுமையாக கவர் செய்து ஆடைகளை அணிய வேண்டும். கொசு விரட்டிகளை மக்கள் பயன்படுத்தலாம்"என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+