Durai Murugan: அமலாக்கத்துறை சோதனை- சென்னையில் வழக்கறிஞர்களுடன் துரைமுருகன் ஆலோசனை- முதல்வருடன் சந்திப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் திமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு நீர்வளத்துறை மற்றும் கனிமவளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். முன்னதாக சென்னை வீட்டில் தமது வழக்கறிஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். மேலும் வேலூர் காட்பாடி வீட்டில் யாரும் இல்லை; யாரோ சிலர் வந்துள்ளதாக மட்டும் தெரியும் எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமைச்சர் துரைமுருகனின் காட்பாடி வீட்டில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் துரைமுருகன் வீடு, அவரது மகன் கதிர் ஆனந்த் எம்பிக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரி, அமைச்சர் துரைமுருகனுக்கு மிகவும் நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் வீடுகள் என வேலூரை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது அமலாக்கத்துறை.

ed duraimurugan mk stalin

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக ஏற்கனவே கதிர் ஆனந்த் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.இந்த விவகாரத்தில் ஏற்கனவே அமலாக்கத்துறை சோதனை நடத்தியது..

இதேபோல மணல் குவாரிகள் விவகாரத்திலும் அமலாக்கத்துறை பல்வேறு இடங்களில் ஏற்கனவே சோதனை நடத்தியது. இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர்களுடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருந்தது. இந்த இரு வழக்குகளுக்காக இன்று அமலாக்கத்துறை சோதனை நடந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் சென்னை கோட்டூர்புரம் வீட்டில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் தலைமைச் செயலகத்துக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், காட்பாடி வீட்டுக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை. காட்பாடி வீட்டில் யாரும் இல்லை. அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக உங்களுக்கு எந்த அளவு தெரியுமோ, அதே அளவுதான் எனக்கும் தெரியும். விவரங்கள் தெரிந்தால் உங்களிடமும் சொல்கிறேன் என்றார்.

இதனிடையே அமலாக்கத்துறை அதிகாரிகள், தலைமைச் செயலகத்தில் அமைச்சர் துரைமுருகனின் அலுவலகத்திலும் சோதனை நடத்தக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இதனால் தலைமைச் செயலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+