வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீர் உடல் நலக்குறைவு
அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
சென்னை: வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் அமைச்சர் துரைகண்ணு. இவருக்கு வயது 70 ஆகிறது. பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கடந்த 2016-ம் ஆண்டு வேளாண் மற்றும் விலங்குகளின் அமைச்சர் பதவிக்கு துரைகண்ணுவை மறைந்த ஜெயலலிதா நியமித்தார்.

இது தமிழக அரசின் முதல் அமைச்சரவை பதவியாகும். துறை ரீதியான வளர்ச்சி பணிகளை அமைச்சர் துரைகண்ணு மேற்கொண்டு வந்தார். இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
இந்நிலையில், துரைகண்ணுவுக்கு திடீரென உடல் சுகவீனம் ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை உடன் இருந்தவர்கள், தஞ்சை கே.ஜி.மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அமைச்சருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உடலில் சர்க்கரை அளவு குறைந்ததாலேயே மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் காரணம் தெரிவித்துள்ளனர். தற்போது அமைச்சரின் உடல்நலனில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும் தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளார். எனினும் விரைவில் அமைச்சர் துரைகண்ணு வீடுதிரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications