Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாலாற்றில் தடுப்பணை.. இரு மாநில உறவு பாதிக்கும்.. ஆந்திர அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர அரசு ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். இந்நிலையில், ஆந்திர அரசின் நடவடிக்கை உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமச்சந்திர ரெட்டி, சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படவிருப்பதாகவும், தேர்தல் முடிவடைந்த பிறகு மேலும் இரு தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் கூறியிருந்தார்.

Minister Duraimurugan criticized Andhra governments construction of a dam across the Palar river as an act of insult to the SC

இதனையடுத்து, நேற்று ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவின் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். மட்டுமல்லாது, இதற்காக அம்மாநில அரசு ரூ.215 கோடி நிதியையும் ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளார். இந்த தடுப்பணையால் ஏற்கெனவே வறண்டு போயுள்ள பாலாறு, முற்றிலுமாக பாலைவனமாக மாறிவிடும் அபாயம் எழுந்திருக்கிறது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆந்திர அரசின் நடவடிக்கை உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். இது 1892 ஆம் ஆண்டைய மதராஸ் மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும்.ஒப்பந்தத்தின்படி,1892 ஆம் ஆண்டின் மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது.

இந்த ஒப்பந்தம் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அளித்த தெளிவாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

2018 - SCC(1) para 4.4.6.1
4.4.6.1 After coming into force of the 1947 Act, the
doctrine of paramountcy has no room for application as the
Government of India became the full sovereign authority. The two Agreements of 1892 and 1924 had neither any political arrangement nor touched any facet of sovereignty of India. Per contra, the Agreements cover the areas of large public interests which do not have any political element and in this backdrop, the agreements are neither inoperative nor completely extinct.

இவ்வாறு இருக்கையில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும். மேலும் உச்சநீதிமன்றம் மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட செயலாகும்.

இது ஒரு தவறான முயற்சியாகும். மேலும் இதற்கு முன் சித்தூர் மாவட்டம் கணேஷபுரத்தில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு அணையை கட்ட முயற்சித்த போது அச்செயலை ஆட்சேபித்து தமிழ்நாடு அரசு 10.02.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு (O.S. No. 2 of 2006) தாக்கல் செய்தது. இவ்வழக்கில் இரு மாநில சாட்சியாளர்களது குறுக்கு விசாரணை 2018- ல் முடிவடைந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நடக்க உள்ளது.

ஏற்கெனவே அமைக்கப்பட்ட இதற்கிடையே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பாணைகளின் உயரத்தை அதிகரித்து இருப்பதை எதிர்த்து மற்றும் ஒரு சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில், O.S. 3 of 2016 தொடுத்துள்ளது. இந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு 2 அசல் வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது தன்னிச்சையாக ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பதும், அதற்காக அதனுடைய நிதிநிலை அறிக்கையில் (Budget) பணம் ஒதுக்கியிருப்பதும் முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகத்தான் கருத வேண்டும்.

இச்செயல் இருமாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல. மேலும் கூட்டாச்சிக்கு எதிரானது. ஆகையால் ஆந்திர அரசு இந்த அணைக்கட்டும் பிரச்சினை, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இம்மாதிரியான எந்த வித செயல்களையும் மேற்கொள்ள கூடாது என இருமாநிலங்களின் நலன் கருதி கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+