“ஐயோ பாவம்!” அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
சென்னை: தமிழிசை முன்னாடியே சொல்லியிருந்தா நான் போன் பண்ணி வேணாம்மான்னு சொல்லியிருப்பேன் என அமைச்சர் துரைமுருகன் தனது பாணியில் தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை கலாய்த்துப் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தென் சென்னை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் பாஜக தலைவரும், முன்னாள் தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று எம்.பியாக இருந்து வருகிறார். கடந்த 2019 தேர்தலில் , தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டு திமுக எம்.பி கனிமொழியிடம் தோல்வியுற்றார். பின்னர் தான் தெலுங்கானா ஆளுநராகவும், தொடர்ந்து புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பை ஏற்றார் தமிழிசை சௌந்தரராஜன்.
இந்நிலையில் தற்போது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தல் அரசியலில் தமிழிசை சௌந்தரராஜன் களமிறங்குகிறார். தென் சென்னை தொகுதியில் தமிழிசை - தமிழச்சி - ஜெயவர்தன் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. அனைத்து கட்சிகளும், தென் சென்னையில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன.
துரைமுருகன் பேச்சு: இந்நிலையில், அமைச்சர் துரைமுருகன் தென் சென்னையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய துரைமுருகன், "தமிழச்சிக்கு ரொம்ப அதிர்ஷ்டம். தமிழிசை எனக்கு ரொம்ப வேண்டியவர். குமரி அனந்தன், நான் எல்லாம் எம்.எல்.ஏ ஹாஸ்டலில் இருந்தபோது தமிழிசை சிறு பிள்ளையாக, எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்.
கிண்டல்: தமிழிசை பாஜக தலைவராகி, ஆளுநராகி விட்டார். ஆளுநர் பதவியை விட்டுவிட்டு இங்கு வரலாமா? 2 மாநிலத்தில் கவர்னராக இருந்துவிட்டு இப்படி வந்திருக்கிறார். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகி விட்டது. போயும் போயும் தென் சென்னையிலா தமிழிசை போட்டி போடுறாங்க? ஐயோ பாவம்! தெரிஞ்சிருந்தா நான் தமிழிசைக்கு போன் போட்டு பேசி இருப்பேன்.
அப்படி நிற்க போறீங்கனா வேற எதாவது தொகுதிக்கு கூட போயிருக்கலாம். இந்த தென் சென்னை தொகுதி திமுக ஜெயிக்கிறதுக்காக பொறந்த தொகுதி. இங்க உள்ளூர்லேயே ஓணான் பிடிக்க தெரியாத ஒருத்தன் வெளியூரரில் யானை பிடிக்க போனானாம். அது இன்னொருத்தர்" என கிண்டலாக விமர்சனம் செய்தார் அமைச்சர் துரைமுருகன்.
-
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா?












Click it and Unblock the Notifications