சின்ன பயலே சின்ன பயலே! ஆளும் வளரணும் அறிவும் வளரணும்! யாரை சொல்கிறார்! வைரலாகும் எ.வ.வேலுவின் பதிவு
சென்னை: எம்ஜிஆர் நடிப்பில் 1961ஆம் ஆண்டு வெளியான 'அரசிளங்குமரி' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'சின்ன பயலே சின்ன பயலே..' என்ற பாடலை சட்டசபையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் பாடியிருந்த நிலையில் தற்போது அமைச்சர் எ.வ.வேலு அந்த வீடியோ கிளிப்பிங்ஸை எடுத்து தனது சமூகவலைதள பக்கத்தில் போட்டிருக்கிறார். எனவே அவர் யாருக்காக இந்த பாடலை சுட்டிக் காட்டுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டசபை கூட்டத்தொடர் என்றாலே காரசாரமான விவாதங்கள், காமெடி, பாராட்டு பத்திரங்கள், கேலி, கிண்டல், கோபம், நெகிழ்ச்சி, வருத்தம் உள்ளிட்டவை ஒருசேர இருக்கும். சட்டசபை கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி, ஆளும் கட்சியை கேள்வி கேட்பதும் அதற்கு ஆளும் கட்சி தனக்கே உரித்தான பாணியில் பதில் அளிப்பதுமாக இருக்கும்.

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில், இது போல் நிறைய சம்பவங்கள் அரங்கேறியுள்ளனன. அதிலும் துரைமுருகன் பதில் சொல்வதை கேட்கவே சிலர் சட்டசபை பேச்சுகளை பார்ப்பதுண்டு.
அவரது பேச்சில் அத்தனை நக்கல், நையாண்டி என இருக்கும். அது போல் சிலர் பாடல் வரிகள் மூலமாகவும் பதிலை அளிப்பார்கள். அந்த மாதிரி 6 மாதங்களுக்கு முன்பு சட்டசபை கூடிய போது திருப்புகழ் வரிகளை சுட்டிக் காட்டி, அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ஆன்மீக தமிழ், திராவிட தமிழ் என இரண்டு உள்ளன. இந்த பக்தி இயக்கத்திற்கு இந்தி திணிப்பு, சமஸ்கிருதம் மூலம் வருங்காலத்தில் அழிவு நிலை ஏற்படும்.
இந்த ஆபத்துகளை எண்ணுகிற போது எனக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார், அரசிளங்குமரி எனும் படத்தில் எழுதிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது. அந்த பாடலை பாடியவர் டி.எம். சவுந்திரராஜன், அதற்கு வாய் அசைத்தவர் எம்ஜிஆர்.
நான் ஏன் மக்கள் திலகம் எம்ஜிஆரை குறிப்பிடுகிறேன் என்றால், எம்ஜிஆரின் முதல் ரசிகர் யாரென்றால் தமிழக முதல்வர்தான். அவருடன் காரில் பயணிக்கும் போதெல்லாம் அவர் எம்ஜிஆர் பாடல்களைத்தான் கேட்பார். அந்த காலத்தில் எம்ஜிஆர் நடிப்பில் திரைப்படங்கள் வெளியானால், முதல்வர் ஸ்டாலினுக்கு போன் செய்து படம் எப்படியிருந்தது என கேட்பது வழக்கம்.
அண்ணாவின் பிறந்தநாள் விழாவை கூட முதல்வரை வைத்துதான் எம்ஜிஆர் கொண்டாடியிருந்தார். அவர்களுக்குள் அப்படி ஒரு நெருக்கம். இன்று மனதில் இருக்கிறது. இதை நான் எப்படி ஒப்பிட்டு பார்க்கிறேன் என சொன்னால், அந்த படத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடலை பாடகர் டி.எம்.சவுந்திரராஜன் பாடினார்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் வாயசைத்தார். தற்போது முதல்வர் சுற்றுப்பயணத்தின் போது நான் கவனிக்கும் விஷயம் என்னவெனில், குழந்தையை ஸ்டாலின் கையில் கொடுத்து முத்தம் கொடுக்கச் சொல்கிறார்கள். கேட்டால் அதிர்ஷ்டம் என்கிறார்கள். என் வீட்டில் கூட முதல்வரின் படத்தை தற்போது பெரியதாக பிரிண்ட் போட்டியிருக்கிறேன்.
குழந்தையை தூக்கிக் கொண்டு அரசிளங்குமரி படத்தில் எம்ஜிஆர் பாடிய பாடல் குறித்த நினைவு, முதல்வர் குழந்தைகளை தூக்கும்போது அந்த பாடல்தான் நினைவுக்கு வருகிறது. அந்த பாடலில் வரும் வரிகள் என்ன என்னவென்றால்:
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்ல எண்ணிப் பாரடா
நீ எண்ணிப் பாரடா
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி
உன் நரம்போடுதான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி
என பாடிய எ.வ.வேலு , தமிழக முதல்வர் ஸ்டாலின் என்ன சொல்கிறார், திராவிட மாடல் ஆட்சி என சொன்னால், எனக்கு இரண்டு கண்கள், ஒன்ற ஆரோக்கியம் இன்னொன்று கல்வித் துறை, ஆள் வளரணும்னு சொன்னால் ஹெல்த் டிபார்ட்மென்ட் நன்றாக இருக்க வேண்டும். கல்வி சிறப்பாக இருந்தால்தான் அறிவு பெற முடியும்.
பேரவைத் தலைவரே, தமிழக முதல்வருக்கு தன்மான உணர்ச்சி என்றும் பீறிடுகிற காரணத்தான் ஆன்மீக தமிழுக்கும் திராவிட தமிழுக்கும் கேடு ஏற்பட்டால் அதை தடுத்து நிறுத்த நான் தயாராக இருக்கிறேன். எத்தனை கோடி நஷ்டமானாலும் பரவில்லை, இருமொழிக் கொள்கைதான் எனது ஆட்சி என கூறி வருகிறார். எனவே மொழி, பண்பாட்டை காப்பாற்ற வேண்டியது ஆட்சியினுடைய கடமை என குறிப்பிட்டிருந்தார்.
இந்த பாடல் வரிகளை அவர் 6 மாதங்களுக்கு முன்பு பேசியிருந்தாலும் தற்போது அவருடைய எக்ஸ்வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதால் அவர் யாரை சொல்கிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்?












Click it and Unblock the Notifications