தமிழகத்தில் கடல்சார் பயன்பாடுகள் பொறுப்புமிக்கதாக இருத்தல் வேண்டும்.. எ.வ.வேலு பேச்சு
சென்னை: தமிழ்நாட்டில் கடல்சார் பயன்பாடு பொறுப்புமிக்கதாக இருக்க வேண்டும் என பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் கடல்சார் பகுதிகளை பயன்படுத்த திட்டமிடுதல் குறித்த பயிலரங்கு சென்னையில் நேற்றைய தினம் நடந்தது. இந்த பயிலரங்கை பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசுகையில் 1,076 கி.மீ. நீளம் கொண்ட இரண்டாவது மிக நீளமான கடற்கரை தமிழகத்தில் உள்ளது. இந்தியாவின் மொத்த கடற்கரையில் 13 சதவீதத்திற்கும் அதிகமான அளவு தமிழகத்தில் உள்ளது. சோழர்கள் காலத்திலிருந்தே தமிழ்நாடு கடல் சார்ந்த செயல்பாடுகளில் முன்னணி மாநிலமாக இருந்து வருகிறது.
மற்ற கடலோர மாநிலங்களைப் போன்று இல்லாமல் தமிழ்நாட்டின் கடலோரத்தில் பல்வேறு வகையான சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், வரலாற்றுச் சிறப்பு மிக்க தலங்கள், தீவுகள், சுற்றுலா, ஆமைகள் முட்டையிடும் பகுதிகள், பறவைகள் சரணாலயங்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன. கடல்சார்ந்த இடங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் அந்த பயன்பாடு பொறுப்புமிக்கதாகவும் நிலைத்திருப்பதாகவும் இருத்தல் வேண்டும் என எ.வ.வேலு பேசியிருந்தார். தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின்படி 42.7 சதவீதம் கடலோர பகுதியில் அரிப்பு ஏற்பட்டுள்ளது, 332 கி.மீ. மட்டுமே சீராக இருக்கிறது. கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 16.16 கி.மீ. நீளம் கடலோர பகுதி அரிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோர பகுதிகள் அரிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக கடலோரம் குறித்து 80 வரைப்படங்களை தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ளது. இதுகுறித்து அந்த மையத்தின் இயக்குநர் மி.வி. ரமணாமூர்த்தி கூறுகையில், கடலோர பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்துவதற்கு முன்பு கடலோர மாற்றங்கள் அதன் தன்மை உள்ளிட்டவை குறித்து தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications