ஜெகத்ரட்சகன் இதற்கெல்லாம் அசரமாட்டார்.. நேர்மையான கணக்கு இருக்கும்.. சர்ட்டிபிகேட் கொடுத்த எவ வேலு!
சென்னை: திமுக எம்.பி ஜெகத்ரட்சகனை குறி வைத்து வருமான வரித்துறை ரெய்டு மேற்கொண்டுள்ள நிலையில், ஜெகத்ரட்சகன் நேர்மையான கணக்குகளை வைத்திருப்பார் என சர்ட்டிபிகேட் கொடுத்துள்ளார் அமைச்சர் எ.வ.வேலு.
அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகன், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உட்பட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததால், அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்ட குற்றச்சாட்டில், ரூ.89.19 கோடி மதிப்பிலான அவரது சொத்துகளை அமலாக்கத்துறை அப்போது முடக்கியது.

ரெய்டு வலையில் ஜெகத்ரட்சகன்: இந்நிலையில், ஜெகத்ரட்சகன் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித் துறைக்கு புகார்கள் சென்ற நிலையில், ஜெகத்ரட்சகனின் வீடுகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ஹோட்டல்கள் என பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5ஆம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரியில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமாக உள்ள இடங்களிலும் சோதனை நடைபெற்றது. அமலாக்கத் துறையும் வருமான வரித்துறையினருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெகத்ரட்சகன் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தியதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். சுதந்திரமாக செயல்பட வேண்டிய விசாரணை அமைப்புகளை மத்திய பாஜக அரசு அரசியல் நோக்கத்துடன் 'இந்தியா' கூட்டணி தலைவர்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்திக் கொள்கிறது என அவர் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி ஆகியோர், ஜெகத்ரட்சகன் மீதான ரெய்டு குறித்துப் பேசியுள்ளனர்.
சர்ட்டிபிகேட் கொடுத்த எவ வேலு: செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எ.வ.வேலு, "ஜெகத்ரட்சகன் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்ல, அவர் ஒரு தொழிலதிபர். அவருடைய வீடு மற்றும் அவர் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் வரும் நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை தேவையற்றது. அனைவருக்கும் பரிச்சயமான மக்கள் பிரதிநிதியான ஜெகத்ரட்சகன் எங்கும் ஓடி ஒளியக்கூடியவர் அல்ல.
வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது சோதனையை மேற்கொள்வதில் தவறில்லை. ஆனால், எந்த காலத்தில் மேற்கொண்டு வருகிறார்கள் என்பதுதான் கேள்வி. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு இந்த சோதனைகளை நடத்தக் கூடாதா? தேர்தல் சமயத்தில் அச்சுறுத்தவே இதுபோன்ற சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் ஜெகத்ரட்சகன் அஞ்ச மாட்டார். அடிபணியவும் மாட்டார். இதுபோல பல ரெய்டுகளை பார்த்தவர் அவர். நேர்மையான கணக்கு வழக்குகளை வைத்திருப்பவர் என்பதால் இதையெல்லாம் கடந்து சென்றுவிடுவார்" எனத் தெரிவித்தார்.
பொன்முடி கருத்து: இதேபோல விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, "முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் பழிவாங்கும் நோக்கத்தோடு ஐடி ரெய்டு நடைபெறுகிறது. அவர் சிறந்த தமிழ் அறிஞர். அவரைப் பற்றி எல்லோருக்கும் தெரியும், இந்த நிலையில் இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. ஜெகத்ரட்சகன் உழைப்பால் உயர்த்தவர் என்பதை நாடு அறியும். கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்டிக் கொண்டிருப்பவர். ஆகவேதான் அவரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று ரெய்டு நடந்து கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications