அமைச்சர் காந்தியின் பேச்சு மொழி! சட்டசபையில் சிரிப்பை அடக்க முடியாமல் அமர்ந்திருந்த எம்எல்ஏக்கள்!
சென்னை: கைத்தறித்துறை மற்றும் துணிநூல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்ற நிலையில், அமைச்சர் ராணிப்பேட்டை காந்தியின் பேச்சைக் கேட்டு எம்.எல்.ஏ.க்கள் பலரும் சிரிப்பை அடக்க முடியாமல் அமர்ந்திருந்தனர்.
தனக்கே உரிய தமிழ் உச்சரிப்பில் அமைச்சர் காந்தி பேசியதோடு மட்டுமல்ல, அவ்வப்போது ''ஆனால்'' என்று குறிப்பிட்டு தனது பேச்சில் ட்விஸ்ட் வைத்துக் கொண்டே இருந்தார்.

அதுமட்டுமல்ல பேச்சைத் தொடங்கும் முன்பாக முதல்வருக்கு மட்டும் வணக்கம் வைப்பார் என்று பார்த்தால், துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், முரசொலி செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கொறடா, எதிர்க்கட்சித் தலைவர், ராணிப்பேட்டை தொகுதி மக்கள், கட்சியினர், என பலருக்கும் வணக்கம் வணக்கம் என்று நீண்ட லிஸ்டை வாசித்தார்.
அமைச்சர் காந்தி இடைவிடாமல் பேசியதை பார்த்து அவர் அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி, வாட்டர் கேன் மூடியை திறந்து கொடுத்து தண்ணீர் குடிக்கிறீர்களா எனக் கேட்டார்.
ஆனால் அதைக் கூட கவனிக்காமல் மும்முரமாக பேசிக்கொண்டிருந்த அமைச்சர் காந்தி, அறிவுப்புகளை வெளியிட ஆரம்பித்தார். அமைச்சர் காந்தியின் பேச்சுமொழி எப்படி இருக்கும் என்பது அவரை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இவர் தனது பாஷையில் ஒரு பக்கம் பேசிக்கொண்டிருக்கும் போது மற்றொரு பக்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் அமர்ந்திருந்ததை காண முடிந்தது.
இன்னும் சொல்லப்போனால் அமைச்சர் பொன்முடி விழுந்து விழுந்து சிரித்தார். இதனிடையே எப்படியோ ஒரு வழியாக அமைச்சர் காந்தி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமர்ந்த பிறகு அவருக்கு கை கொடுத்து அனைத்து அமைச்சர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் சிரித்த முகத்துடன் காந்தியை நோக்கி திரும்பிப்பார்த்து வணக்கம் வைத்து தனது பாராட்டை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications