"ஓட்டு போட்டாச்சு".. ஸ்ட்ரைட்டா பிரியாணி கடைக்குள் நுழைந்த அமைச்சர்.. திகைத்த ராயப்பேட்டை
அமைச்சர் ஜெயக்குமார் பிரியாணி சாப்பிடும் போட்டோ வைரலாகிறது
சென்னை: ஓட்டு போட்டுவிட்டு, நிஜாம் பாய் பிரியாணி கடைக்குள் நுழைந்துவிட்டார் அமைச்சர்.. இந்த போட்டோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது..!
ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகிறார்... இந்த முறை ஜெயக்குமார் பிரச்சாரமே வித்தியாசமாக இருந்தது..
தொகுதி முழுவதும் சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்து வாக்கு கேட்டார்.. டான்ஸ் ஆடியும், பாட்டு பாடியும் வாக்கு கேட்டார்.. இளநீர் வெட்டி தந்து பொதுமக்களிடம் வாக்கு கேட்டார். மக்களிடம் இயல்பாக பழகுவதும், ஈகோ இல்லாமல் பேசுவதும் ஜெயக்குமாருக்கு இயல்பான ஒன்று என்றாலும், இந்த பிரச்சாரம் அதற்கு உறுதுணையாக இருந்தது.

உளறல் மன்னன்
அதேசமயம், திமுக தரப்பை உண்டு, இல்லை என்று விமர்சித்து வந்தார்.. "ராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் 100 கோடி ரூபாய் தேர்தல் செலவு செய்ய பிளான் உள்ளது.. திமுகவின் நட்சத்திர பேச்சாளர் ஆர்எஸ் பாரதி ஒரு உளறல் மன்னன்... உதயநிதி ஸ்டாலின் ஒரு பச்சிளம் குழந்தையைப் போல செயல்படுகிறார்... ஊழலில் ஊறிய கட்சி திமுக" என இப்படி வாரி வாரி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வாக்கு சேகரித்தார்.

திமுக தலைவர்
ஜெயக்குமார் மட்டுமில்லை.. திமுக தலைவரும் இதே ராயபுரம் தொகுதியில் வந்து ஜெயக்குமாரை சரமாரியாக விமர்சித்து வாக்கு கேட்டார்.. "இந்த தொகுதியில் நிக்கிற அமைச்சர் ஜெயக்குமாரை ஓட ஓட விரட்டணும்.. தோல்வி அடைய வைக்கணும்.. தோல்வின்னா உங்க வீட்டு தோல்வி, எங்க வீட்டு தோல்வி இல்லை.. படுதோல்வி அடையணும்.. டெபாசிட் காலி ஆகணும்.. அவர் சாதாரண ஆளுன்னு நினைச்சிடாதீங்க.. வெறும் கில்லாடி இல்லை.. பலே கில்லாடி.. ஜெயலலிதாவையே கவிழ்க்க பார்த்தவர்" என்று தெறிக்க விட்டார்.

ஜெயக்குமார்
இந்த அளவுக்கு ராயபுரம் தொகுதி பிரச்சார நேரத்தில் படுபிஸியாக இருந்தது.. களமே சூடாகி கிடந்தது.. ஆனால், இதற்கான அறிகுறி எதுவும் இல்லாமல், ஜெயக்குமார் இன்றைய தினம் கேஷூவலாகி விட்டார்.. மதிய நேரம் வாக்குச்சாவடிக்கு வந்து தன் வாக்கை பதிவு செய்தார் ஜெயக்குமார்..

பிரியாணி
ஆனால், வீட்டுக்கு போகாமல், நேராக ராயப்பேட்டையில் உள்ள நிஜாம் பிரியாணி கடைக்கு சென்று உட்கார்ந்து பிரியாணி ஆர்டர் செய்தார்.. அவருடன் வேறு யாரையும் காணோம்.. அவர் மட்டும் உட்கார்ந்து ஆர்டர் செய்து, பிரியாணி வரவழைத்து சாப்பிடும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications