ரஜினிகாந்தும் கமலும் இணைந்தால் 16 வயதினிலே போல் ஒரு படம் கிடைக்கும்.. அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
சென்னை: ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இணைந்தால் மீண்டும் 16 வயதினிலே படம் போல் ஒரு நல்ல படம் கிடைக்கலாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையிலிருந்து தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமாரும், தங்கமணியும் திடீர் பயணமாக டெல்லி சென்றனர். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை ஜெயக்குமார் சந்தித்தார்.
அவர் கூறுகையில் டெல்லிக்கு அரசு முறை பயணமாக செல்கிறோம். விருதுநகரில் நடந்த விழாவில் முதல்வர். இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். சிறுபான்மை மக்களுக்கு இதய துடிப்பாக அதிமுக அரசும் கட்சியும் உள்ளது.

ரஜினிகாந்த்
இதனால் இஸ்லாமியர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. சிறுபான்மை மக்களுக்கு நூற்றுக்கும் மேல் எவ்வளவு உயரம் இருக்கிறதோ அந்த அளவுக்கு பாதுகாப்பு அளிப்பதுதான் அதிமுக அரசு. ரஜினிகாந்த்- கமல்ஹாசன் இணைவதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. ரஜினிகாந்த் இன்னும் கட்சியே தொடங்கவில்லை.

அதிமுக தொடக்கம்
1972-ஆம் ஆண்டு எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலகி அதிமுக என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் தொடர்ந்து 12 ஆண்டுகள் சிறப்பாக கட்சியை நடத்தினார். அதன் பின்னர் ஜெயலலிதா கட்சியை ஒன்றாக்கி 40 லட்சம் தொண்டர்களை ஒன்றரை கோடி தொண்டர்களாக மாற்றினார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி ஆட்சி 3 மாதத்தில் போய்விடும் என்றார்கள்.

வாக்கு வங்கி
ஆனால் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நலத்திட்டங்களால் 4 ஆண்டுகளாக ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் அதிமுகவின் நலத்திட்டங்களை ஏற்று எங்கள் கட்சிக்கு அங்கீகாரம் தரும் வகையில் அடுத்த ஆண்டு 2021-ஆம் ஆண்டும் அதிமுகவுக்கு மக்கள் வாக்களிப்பர். எனவே யார் கட்சியை ஆரம்பித்தாலும் எங்களுடைய வாக்கு வங்கியில் கை வைக்க முடியாது.

சகஜ நிலை
ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்தால் மீண்டும் 16 வயதினிலே படம் போல் ஒரு நல்ல படம் கிடைக்கலாம். வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 3 முறை சந்தித்து பேசியுள்ளார். அப்பகுதி மக்களிடமும் நான் பேசியுள்ளேன். எனவே இஸ்லாமிய மக்கள் புரிந்து கொண்டு போராட்டத்தை கைவிட்டு விட்டு சகஜ நிலைக்கு வர வேண்டும் என்றார் ஜெயக்குமார்.
-
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications