ஆபரேஷன் சக்ஸஸ்.. பேஷன்ட் டெட்.. தமிழிசை கருத்துக்கு ஜெயக்குமார் பொளேர் பதில்
தமிழிசையின் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் புது விளக்கம் அளித்துள்ளார்.
விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் உள்ள செயின்ட் தாமஸ் முதியோர் இல்லத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் முதியோர் இல்லங்களில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு நிமோனியா தடுப்பூசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனை அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கூட்டாக தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.

தீர்க்கவில்லை
அப்போது, "அன்று காங்கிரசுடன் கூட்டணியில் திமுக இருந்தபோது, நிறைய பிரச்சனைகளை சரி செய்திருக்கலாம். ஆனால் அதெல்லாம் தீர்க்காமல் இன்னும் அதிகப்படுத்தினார்கள்.

நிலைநாட்டுவோம்
எனவே மேகதாட்டு விஷயத்தில், திமுகவை போல் சந்தர்ப்பவாதம் இன்றி உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தளவில் உணர்வுகளை நாடாளுமன்றத்தில் பிரதிபலித்து உரிமையை நிலைநாட்டுவோம்" என்றார்.

வெற்றிகரமான தோல்வி
இதையடுத்து, 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், "வெற்றிகரமான தோல்வி" என்று சொல்லி இருக்கிறாரே, அதை பற்றி என்னி நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

ஆபரேஷன் சக்ஸஸ்
இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் சிரித்துவிட்டு "ஆங்கிலத்தில் சொல்வார்களே 'ஆப்பரேஷன் சக்ஸஸ், பேஷண்ட் டெட்' என்று. அதுபோல, பல்வேறு வகையில் கருத்துக்களை சொல்வார்கள். எனவே இதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன என்பதையும், என்ன வெளிப்படுத்த முயல்கிறார் என்பதையும், யார் சொன்னாங்களோ அவங்க கிட்டதான் நீங்கள் கேட்க வேண்டும்.

வேறு மாநில தேர்தல்
இது வேறு மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல். ஒரு கட்சி ஜெயித்தால் மற்றொரு கட்சி தோற்கும். அதனால் இது சம்பந்தமாக தோற்றவர்களிடம்தான் நீங்கள் கருத்து கேட்க வேண்டும்" என்று பதிலளித்தார் அமைச்சர்.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications