தெலுங்கில் பேசிய திமுக எம்எல்ஏ.. தெலுங்கு தெலிது தமிழ்ல மாட்லாடு.. அமைச்சர் அதகளம்!
Recommended Video
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் தெலுங்கில் பேசிய திமுக எம்எல்ஏவிடம் தெலுங்கு தெரியாது தமிழில் பேசுங்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தமிழ் கலந்த தெலுங்கில் பேசியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தமிழக சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றைய கூட்டத்தில் பேசிய தளி தொகுதி திமுக எம்எல்ஏ பிரகாஷ் தொகுதி பிரச்சனைகளை பட்டியலிட்டார்.
தொடக்கத்தில் தமிழ், பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு என கலந்து பேசிய எம்எல்ஏ பிரகாஷ் ஒரு கட்டத்தில் முழுக்க முழுக்க தெலுங்கிலேயே பேச ஆரம்பித்தார். இதனால் அவையில் இருந்தவர்கள் என்ன சொல்கிறார் என புரியாமல் இருந்தனர்.

தமிழில் பேசுங்கள்
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் தனபால் மொழிமாற்றம் செய்யும் வசதி சட்டசபையில் இல்லை. ஆகையால் நீங்கள் தமிழில் பேசுங்கள். நீங்கள் தெலுங்கில் பேசுவது அவைக்குறிப்பில் பதிவாகாது என்றார்.

அமைச்சர் பதில்
ஆனாலும் திமுக எம்எல்ஏ பிரகாஷ் தொடர்ந்து தெலுங்கிலேயே பேசினார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு பல மொழிகள் தெரியும். ஆனால் எங்களுக்கு தெரியாது என்றார்.

தெலுங்கு தெலிது தமிழ்ல மாட்லாடு
மேலும் தெலுங்கு தெலிது தமிழ்ல மாட்லாடு என்றும் தனக்கு தெரிந்த தெலுங்கில் திமுக எம்எல்ஏ பிரகாஷிடம் கூறினார். அமைச்சர் தெலுங்கு கலந்த தமிழில் பேசியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

தெலுங்கில் பதிலளித்த ஜெயலலிதா
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பேசுவதில் வல்லவர். கேள்வி கேட்கும் மொழியிலேயே பதிலளித்து அசத்துவார். கடந்த சட்டசபையில் ஓசூர் எம்எல்ஏவாக இருந்த கோபிநாத் தெலுங்கில் பேசும் போதெல்லாம் ஜெயலலிதா தெலுங்கில் பதிலளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications