அதிமுக மீது தொடரும் விமர்சனம்: துக்ளக் குருமூர்த்திக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை
Recommended Video
சென்னை: அதிமுகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுகவின் எதிர்வினையை தேடுவது நல்ல அல்லது என எச்சரித்திருக்கிறார் ஜெயக்குமார்.
அதிமுக அணிகளை இணைக்கும் முயற்சிகளை பாஜகவுக்காக மேற்கொண்டவர் துக்ளக் குருமூர்த்தி. இதற்காக அமைச்சர்கள் குருமூர்த்தியை நேரில் சந்தித்தும் பேசியிருந்தனர்.
ஆனால் திடீரென அதிமுகவை மிக கடுமையான வசைசொற்களால் விமர்சித்தார் குருமூர்த்தி. அதிமுகவினரை ஆண்மையற்றவர்கள் என ட்விட்டரில் விமர்சித்தார் அவர்.

சைலண்ட் மோடில் குருமூர்த்தி
அப்போது அதிமுக ஒரு சில எச்சரிக்கைகளை விடுத்து அமைதி காத்தது. லோக்சபா தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி அமைந்த நிலையில் குருமூர்த்தியும் அமைதியாகிவிட்டார்.

அதிமுகவே காரணம்
ஆனால் இந்த கூட்டணி படுதோல்வி அடைந்த நிலையில் மீண்டும் அவர் உக்கிரமானார். அதிமுகவால்தான் பாஜகவுக்கு தோல்வி என பல புள்ளி விவரங்களை வெளியிட்டார்.

சர்ச்சைக்குரிய கார்ட்டூன்
அவர் வெளியிட்ட புள்ளி விவரங்களே பொய்யானவை என சர்ச்சையானது. பின்னர் மத்திய அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடம் கிடைக்காதது குறித்து துக்ளக் போட்ட கார்ட்டூன் அதிமுகவினரை கொந்தளிக்க வைத்தது.

குருமூர்த்திக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை
பிச்சைக்காரர்களை போல அதிமுகவினரை அதில் சித்தரித்திருந்தது துக்ளக். இதற்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான நமது அம்மாவில் பதிலடி தரப்பட்டது. ஆனாலும் குருமூர்த்தி அதிமுகவை விடுவதாக இல்லை... தொடர்ந்து விமர்சித்தே வருகிறார். இது தொடர்பாக இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள், அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், அதிமுகவின் எதிர்வினையை குருமூர்த்தி தேடாமல் இருப்பதே நல்லது. ஏற்கனவே அவரது விமர்சனங்களுக்கு கட்சி பத்திரிகை மூலம் பதில் கொடுத்திருக்கிறோம். தொடர்ந்தும் அவர் எங்களை விமர்சிப்பது நல்லது அல்ல என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications