அன்னைக்கு நிலோபர்.. "இவங்க" ஒன்னு நினைச்சா.. "மக்கள்" வேற முடிவு பண்ணிட்டாங்க.. "கப்சிப்" ஆன வீரமணி
கேசி வீரமணி தோல்வியை தழுவுகிறார்
சென்னை: ஜோலார்பேட்டை தொகுதியில் அமைச்சர் கே.சி.வீரமணி தோல்வியை தழுவி உள்ளார்.. திமுக வேட்பாளர் தேவராஜ் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளார்.. இதற்கு என்ன காரணம்?
அமைச்சர் வீரமணி மறுபடியும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார் என்றதுமே திமுக தரப்பு சற்று தெம்பாகிவிட்டது.. காரணம், இந்த தொகுதியில் ஏற்கனவே வீரமணி மீது நிறைய அதிருப்திகள் உள்ளன.
இந்த மக்களுக்கு இப்போது வரை குடிநீர் பிரச்சனை உள்ளது.. ரேஷன் கடைகளில் கொடுக்கக்கூடிய பொருட்கள் தரமாக இல்லை என்ற புகார்களும் உள்ளன.. அதிமுக வசம் 10 வருஷமாக இந்த தொகுதி இருந்தும் எதுவுமே வசதிகள் செய்து தரப்படவில்லை என்பது அடிப்படை அம்சமாக இருந்து வருகிறது.

ஜோலார்பேட்டை
ஆனால், அமைச்சர் வீரமணியை பொறுத்தவரை தனிப்பட்ட அளவில் செல்வாக்கு உடையவர்.. சிறுபான்மையினர், இஸ்லாமியர்கள் உள்பட பலரும் அதிமுகவுக்கு ஆதரவானவர்கள்தான்.. மற்ற தொகுதிகளில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைந்துள்ளதால், இஸ்லாமியர்கள் அக்கட்சிக்கு அவ்வளவாக ஆதரவு தெரிவிக்கவில்லை.

செல்வாக்கு
எனினும், வீரமணி என்ற தனிநபரின் செல்வாக்கு தான், இந்த தொகுதியில் அதிமுக வலுப்பெற்று வந்ததற்கு காரணம்.. அதே வீரமணியால்தான் தற்போது அதிருப்திகளும் கூடி உள்ளது... கட்சிக்குள்ளேயே இந்த அதிருப்தி இருக்கிறது.. இதைதான் அமைச்சர் நிலோபர் கபில் ஓபனாகவே போட்டு உடைத்தார்.. "வீரமணியும், துரைமுருகனும் மாமன், மச்சான்" என்று பேசி கொள்பவர்கள் என்றார்.

துரைமுருகன்
இந்நிலையில், காலையில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.. இதில், திமுகவின் சீனியர் தலைவரான துரைமுருகனுக்கு மளமளவென குவியவில்லை.. அதிமுக வேட்பாளர் ராமு என்பவர் துரைமுருகனுக்கு டஃப் தந்து வருகிறார்.. அதேபோல அதிமுகவின் அமைச்சர் வீரமணிக்கு, திமுகவின் தேவராஜ் என்பவர் டஃப் தந்து வருகிறார்.. இது திமுக, அதிமுகவினருக்கு ஷாக்கை தந்து வருகிறது. இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது..

வீரமணி
அதாவது துரைமுருகனும் சரி, வீரமணியும் சரி.. இருவருமே நல்ல நெருக்கத்தில் உள்ளவர்கள்.. இருவருமே இந்த மாவட்டங்களின் விஐபிகள்... அசைக்க முடியாத செல்வாக்கை பெற்றிருப்பவர்கள்.. இந்த தேர்தலில் துரைமுருகன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, அவரை எதிர்த்து ராமுவை வேட்பாளராக நிறுத்தினாராம் வீரமணி.

கண்ணீர்
அதேபோல வீரமணி ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே, தேவராஜ் என்ற பலவீனமான வேட்பாளரை கொண்டு போய் நிறுத்தினாராம் துரைமுருகன்.. கடைசியில் இவர்கள் போட்ட கணக்கு, இவர்களுக்கே திருப்பி அடித்துவிட்டதாக சொல்கிறார்கள். இந்த விஷயத்தைதான், அன்று நிலோபர் கபிலும் செய்தியாளர்களிடமே சொல்லி இருந்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications