"விஜய் நல்ல மனசால் கபினி நீர் திறப்பா?" அது மீந்து போனத தூக்கி போட்டதுமா! கீர்த்தனாவுக்கு கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடகா அணைகள் நிரம்பியதால் வேறு வழியின்றி கபினியில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டதை கொண்டாடுவதா என அமைச்சர் கீர்த்தனாவுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அப்படி அவர் என்ன மாதிரியான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் என்பதை பார்க்கலாம்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்வீட்டில் கூறியிருப்பதாவது: இயற்கையின் அருள் எப்போதும் மக்களின் நலனுக்கே துணை நிற்கிறது.

Minister Keerthana

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால், காவிரியில் நீர்வரத்து அதிகரித்து, டெல்டா விவசாயிகளின் பாசனத் தேவைகள் பூர்த்தியாகும் சூழல் உருவாகியுள்ளது.

எத்தனை இடையூறுகளும், எத்தனை தடைகளும் வந்தாலும், மக்களின் நலனையே சிந்திக்கும் நம் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நல்ல மனதிற்கு இயற்கையே துணை நிற்கிறது. மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு நல்ல முயற்சிக்கும் இயற்கையின் ஆசீர்வாதம் என்றும் இருப்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.

இதன் மூலம் காவிரி டெல்டா விவசாயிகளின் குறுவை, சம்பா சாகுபடிகள் செழித்து வளர்ந்து, விவசாயிகளின் இல்லங்களில் வளமும் மகிழ்ச்சியும் பெருக இறைவனை மனமார வேண்டுகிறேன்.

"நல்ல மனமும், மக்கள் நல எண்ணமும் இருக்கும் இடத்தில் இயற்கையும் துணையாக நிற்கும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

அதாவது ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிட்டிருக்க வேண்டும். 2 மாதமாக தண்ணீர் இல்லை. நம்மால் 2 மாதம் சாப்பிடாமல் இருக்க முடியுமா என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

"நிர்வாக திறமை வேண்டும்.. இயற்கையே ஒவ்வொரு முறையும் வந்து காப்பாற்றாது.." என்கிறார் இன்னொருவர்.

"அப்பக்கூட இந்த அரசாங்கத்தால தண்ணீர் கொண்டு வர துப்பில்ல? இந்த தற்குறி ரீல்ஸ் காரனுங்களால தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வராதுன்னு இயற்கைக்கே தெரிந்திருக்கிறது." என்கிறார் இன்னொரு நெட்டிசன்.

"கர்நாடகா அணைகள் நிரம்பி வழிவதால் திறந்துதான் விடணும். இதுல நல்ல மனசுக்கெல்லாம் இடம் இல்லை. அமைச்சர் பதவியை காப்பாற்றிக் கொள்ள இப்படி பேசுவது நல்லா தெரியுது. திறமை இருந்தால் நமக்கு சேர வேண்டிய தண்ணீரை வாங்கி கொடுங்க" என கடுமையாக சாடியுள்ளார்.

"அப்போ விஜய் சார் செய்த பாவத்தில்தான் இத்தனை நாள் தண்ணீர் வரலைனு வச்சிக்கலாமா" என்கிறார் ஒருவர்.

"நல்ல மனமும், மக்கள் நல எண்ணமும் இருக்கும் இடத்தில் இயற்கையும் துணையாக நிற்கும்." மழை பெய்யுறது தமிழ்நாட்டில இல்ல.. அப்போ நீங்க சொல்ல வர்றது... கர்நாடக அமைச்சர்கள் மக்கள் நல எண்ணத்தோட இருக்காங்க.. அப்படி தானா" என்கிறார்.

என்னங்க அந்த மழை தமிழ்நாடு ல பெய்ய மாட்டிக்கிது... இப்ப அந்த மனசு நல்ல மனசு இல்லையா... உங்களோட உரிமை பங்கை உங்களுக்கு குடுத்தாதான் அது மரியாதை. மீந்து போனதை தூக்கி போட்டா, அதுக்கு பேரு என்ன தெரியுமா?! என பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

ஆனால் தவெகவினர் கீர்த்தனாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். "காவிரியில் திறக்கப்படும் நீரானது உபரி நீராக இருந்தாலும் விவசாய மக்களின் நலன் காக்கும் என்று உறுதியாக சொல்கிறேன். இறைவனின் அருளால் இந்த வருடம் மழை பெய்து மக்களின் வாழ்வில் ஒளி வரும் என்று நம்புகிறேன்." என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+