ஆஹா.. தமிழகத்தின் புதிய மாநகராட்சி இந்த நகரமா? சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு சொன்ன பதில்!
சென்னை: ஊராட்சிகளை அருகாமையில் உள்ள நகராட்சிகளுடன் இணைத்து மாநகராட்சியாக மாற்றுவது குறித்து அரசு பரிசீலிக்கும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மேலும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியை மாநகராட்சியாக மாற்றியமைப்பது குறித்து ஆய்வு செய்த பிறகு முடிவெடுக்கப்படும் என்ற தகவலையும் சட்டசபையில் அவர் வெளியிட்டார்.
ஏற்கனவே தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் உள்ள நிலையில் உடுமலைப்பேட்டை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் தமிழகத்தின் 22-வது மாநகராட்சியாக அது திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டசபை
தமிழக சட்டசபையில் இன்று பிற்பகல் மிகவும் முக்கியத் துறைகளில் ஒன்றான மின்சாரத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில் முன்னதாக உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். அந்த வகையில் உடுமலைப்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன், உடுமலைப்பேட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா எனக் கேள்வி எழுப்பியதுடன் கோரிக்கையும் விடுத்தார்.

அமைச்சர் நேரு
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உடுமலைப்பேட்டை நகராட்சியை மாநகராட்சியாக மாற்றியமைப்பது குறித்து ஆய்வு செய்த பிறகே அது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் இதுமட்டுமல்லாமல் ஊராட்சிகளை அருகாமையில் உள்ள நகராட்சிகளுடன் இணைப்பது பற்றி ஊராட்சி மன்றத் தலைவர்களின் பதவிக்காலம் முடிவடையும் போது பரிசீலிக்கப்படும் என்ற தகவலையும் வெளியிட்டார்.

பரிசீலிக்கப்படும்
மேலும், இதேபோல் பேரூராட்சிகளை அருகாமையில் உள்ள ஊராட்சிகளை இணைத்து நகராட்சிகளாக மாற்றுவது பற்றியும் ஆய்வு செய்து பரிசிலீக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது தமிழகத்தில் 138 நகராட்சிகள் 21 மாநகராட்சிகள் உள்ள நிலையில், இவைகளின் எண்ணிக்கை இன்னும் 4 ஆண்டுகளில் மேலும் உயரக்கூடும் என்பது அமைச்சர் நேருவின் பதிலில் இருந்து சூசகமாக உணர முடிகிறது.

மக்கள் முடிவு
இதனிடையே ஊராட்சிகளை பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைக்க மக்கள் மத்தியில் என்ன மாதிரியான கருத்துக்கள் எழப்போகிறது என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. காரணம் வரி விதிப்பில் ஊராட்சிகளை காட்டிலும் நகராட்சி, மாநகராட்சிகளில் அதிக சதவீதம் செலுத்த வேண்டும் என்பதால் இது ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறக்கூடும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications