''நீதிபதிகளை பார்த்தால் குனிந்து பேசு! கோ.சி.மணி சொல்லித் தந்த பாடம்''! ஓபனாக பேசிய கே.என்.நேரு!
சென்னை: ''டேய் யாரிடம் வேண்டுமானாலும் வம்பு இழு, நீதிபதிகளிடம் மட்டும் எந்த வம்பும் வைத்துக் கொள்ளாதே என்றும் குனிந்து பேச வேண்டும்'' எனவும் தனக்குச் சொல்லிக் கொடுத்தவர் மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி என அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார்.
திமுக வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் மத்தியில் பேசிய போது அமைச்சர் நேரு இதனைக் கூறினார். 1989ஆம் ஆண்டு முதல்முறையாக தாம் அமைச்சரான போது சென்னை பசுமை வழிச்சாலையில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டதாகவும் அப்போது நீதிபதிகள் நடைபயிற்சி வருவார்கள் எனவும் ஆனால் அவர்களிடம் எல்லாம் பழகி வைத்துக் கொள்ள தவறிவிட்டேன் எனவும் ஓபனாக பேசினார்.

நீதிபதிகள், வழக்கறிஞர்களின் முக்கியத்துவம் அப்போது தனக்கு தெரியாமல் போய்விட்டதாகவும் இப்போது ஓரளவு தெரிந்த நீதிபதிகள் கூட எங்கேயாவது பார்க்க நேரிட்டால் பார்த்தும் பார்க்காதது போல் சென்றுவிடுகிறார்கள் என வேதனைத் தெரிவித்தார். திமுக வழக்கறிஞர்கள் அணியில் இருப்பவர்கள் வாதாடும் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இன்றைய காலக்கட்டத்தில் வக்கீல்கள் இல்லையென்றால் தேர்தலே நடக்காது என்ற சூழல் நிலவுவதாகவும் வேறு எந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத சிறப்பாக திமுகவில் மிகத் திறமையான வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் என பெருமிதம் தெரிவித்தார். அதிலும் என்.ஆர்.இளங்கோ போன்றோர் நாலு வார்த்தை பேசினாலே போதும் எதிர்தரப்பில் எதுவும் பேச முடியாது எனத் தெரிவித்தார்.
யாரை விடுகிறார்களோ இல்லையோ எப்படியும் தன் மீது வழக்குகள் போடுவார்கள் என்றும் அமைச்சர் கே.என்.நேரு மத்திய அரசு குறித்து சூசகமாக தெரிவித்தார். மற்ற நிர்வாகிகள் பேசும்போதெல்லாம் நிசப்தமாக இருந்த கூட்டம் அமைச்சர் நேரு பேசும் போது மட்டும் உற்சாகத்துடன் சிரிப்பலையுடன் காணப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications