மறுபடியும் விசாரணைக்கு அழைத்த அமலாக்கத் துறை.. மருத்துவமனையில் அட்மிட்டானார் கேஎன் நேரு சகோதரர்
சென்னை: அமைச்சர் கேஎன் நேருவின் மகன், சகோதரர்கள் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை 3 நாள் அதிரடி சோதனை மேற்கொண்டது. சோதனையின்போது கேஎன் நேருவின் சகோதரர் ராமச்சந்திரனை அழைத்து சென்ற அமலாக்கத்துறை 2 நாள் விசாரணை நடத்தியது. இன்று மீண்டும் விசாரணைக்கு அழைப்பு விடுத்து சம்மன் வழங்கப்பட்ட நிலையில் ராமச்சந்திரன் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருப்பவர் கேஎன் நேரு. திமுகவின் மூத்த தலைவராக வலம் வருகிறார். இந்நிலையில் தான் கேஎன் நேருவின் மீது அமலாக்கத்துறையின் பார்வை திரும்பியது.

அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை, திருச்சி உள்பட பல இடங்களில் உள்ள கேஎன் நேருவின் மகன் மற்றும் சகோதரர்களின் வீடு, அலுவலகங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
கேஎன் நேருவுக்கு ரவிச்சந்திரன், மணிவண்ணன் என்று 2 சகோதரர்கள் உள்ளனர். கேஎன் நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் திமுக எம்பியாக உள்ளார். இவர்களின் வீடு, அலுவலகங்களில் தான் அமலாக்கத்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது.
சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு சகோதரர்கள், மகன் வீடு, அலுவலகம் என 15க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதாவது கேஎன் நேருவின் சகோதரர்கள் மற்றும் அவரது மகன் பங்குதாரர்களாக உள்ள கட்டுமான குழுமம் தொடர்பான விவகாரத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
காற்றாலை மின்சார நிறுவனத்துக்காக வாங்கப்பட்ட கடன் தொகை, மோசடியாக வேறு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது தொடர்பான விவகாரத்தில் அமலாக்கத்துறை என்ட்ரி கொடுத்துள்ளது. சோதனையின்போது சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
3 நாளுக்கு பிறகு இந்த சோதனை முடிவுக்கு வந்தது. இந்த சோதனை என்பது கேஎன் நேரு, அவரது மகனும் எம்பியுமான அருண் நேரு, கேஎன் நேருவின் சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோருக்கு சிக்கலை ஏற்படுத்தியது. மேலும் சோதனை முடிவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேஎன் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். 2 முறை ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.
அதன்பிறகு இன்று கேஎன் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மாறாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவருக்கு எந்த வகையான பாதிப்பு ஏற்பட்டது? மருத்துவ சிகிச்சை என்ன வழங்கப்படுகிறது? என்பது பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications