அதிக காசு கேட்கும் ஆட்டோக்காரர்கள் தொல்லை இனி இல்லை? மா. சுப்பிரமணியன் வெளியிட்ட பூரிப்பு வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிநாட்டில் தானியங்கி வாடகை கார் செயலியான Waymo குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். அந்த காரில் சீட் பெல்ட் போட்டவுடன்தான் கார் புறப்படுமாம். போக்குவரத்து விதிகளையும் மதித்து சீராக இயங்குகிறது என அவர் பூரிப்படைந்துள்ளார்.

ma subramanian

இதுகுறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: 'waymo'செயலி மூலமாக பதிவு செய்தவுடன் கார் வந்து நிற்கிறது. காரில் ஏறி அமர்ந்து சீட் பெல்ட் அணிந்ததை உறுதி செய்யப்பட்டு பயண நேரம் Display ஆகிறது. நாம் விரும்பும் பாடல்கள் கேட்டபடி பயணிக்கிறோம். போக்குவரத்து சிக்னல் உள்ளிட்ட விதிகளை மதித்து ஒரே சீராக செல்வதால் விபத்துகளற்ற மகிழ்ச்சிப் பயணமாக அமைகிறது.

Human Brain செயல்படுவதை போல் Sensors உதவியுடன் லாஸ் ஏஞ்சலஸ், சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் உலா வரும் நூற்றுக்கணக்கான இக்கார்கள் ஓட்டுனர்கள் இல்லாமலேயே இயக்கபட்டு வருகிறது. விஞ்ஞான வளர்ச்சியின் உச்சமான இந்த 'Waymo' கார்களின் செயல்பாடு மிகவும் பிரமிப்பாக உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டு தான் பயணம் செய்த காரின் வீடியோவையும் பதிவிட்டிருந்தார்.

இது போன்று டிரைவரே இல்லாத தானியங்கி கார்கள் வெளிநாடுகளில் இயக்கப்படுகின்றன. இந்த கார்களில் நவீன தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதால் இதில் பயணிக்க எந்த பயமும் இன்றி பயணிக்கலாம் என்கிறார்கள். மேலும் இது போல் டிரைவரே இல்லாமல் இருக்கும் கார் சேவையில் என்ன பிளஸ் என்றால் கொஞ்சம் காசை கூட்டி கொடுங்கள் கேட்க டிரைவர்கள் இருக்க மாட்டார்கள்.

எந்த ஊரிலும் கார், ஆட்டோ போன்ற வாகனங்களை பயன்படுத்தும் போது, குறிப்பிட்ட தூரத்திற்கு ஆகும் காசை விட "மேலே போட்டு கொடுங்கள் " என டிரைவர்கள் கேட்பார்கள். எல்லாரும் அப்படி கேட்கமாட்டார்கள். யாரோ ஒரு சிலர்தான். மேலும் தெரியாத மொழி, ஊருக்கு புதிது என்றால் கட்டணக் கொள்ளைதான். இதை நம்மில் பலரே அனுபவித்திருப்போம் என்பதில் மாற்று இல்லை. எனவே இது போல் தானியங்கி வாகன சேவை இருந்தால் மீட்டருக்கு மேல் காசை இனி யாரும் கேட்க மாட்டார்கள் போலயே என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.

கலிபோர்னியா-லாஸ் ஏஞ்செல்சில் நடைபெற்ற "மனநல மருத்துவ சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்றுள்ளார். மேலும் சான் பிரான்சிஸ்கோவில் வளைகுடா தமிழ்மன்றத்தின் சார்பில் "தமிழ் வெற்றிநடை ஓடு" எனும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

அதில் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு 21.1 கிமீ தூரம் ஓடி, 161 வது போட்டியை நிறைவு செய்தார். கடுமையான வேலை பளுக்கிடையிலேயும் நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெருமக்கள் கலந்து கொண்டு ஓடி சிறப்பித்ததும், இளைஞர்களிடையே உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நம் முயற்சிக்கு தொடர்ந்து ஆதரவு பெருகி வருவதும் மகிழ்ச்சியளிப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் முதலீடுகளை ஈர்க்க கடந்த 2024 ஆம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் சென்றிருந்தார். அப்போது அவர் ஜாகுவார் நிறுவனத்தின் தானியங்கி காரில் பயணித்த வீடியோ வைரலானது.

அவர் வீடியோவுடன் செய்த பதிவில் கூறியிருப்பதாவது: இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டவை!

- தந்தை பெரியார் (இனி வரும் உலகம்) இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+