முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை எப்படி இருக்கு? எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்? அமைச்சர் மா.சு பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்த முக்கிய தகவல்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

    முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை எப்படி இருக்கு? எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்? அமைச்சர் மா.சு பரபர

    தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த 12ஆம் தேதி உடற்சோர்வு இருந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதே அவரே தனது ட்விட்டரில் தெரிவித்து இருந்தார்.

     முதல்வர் ஸ்டாலின்

    முதல்வர் ஸ்டாலின்

    மேலும், அனைவரும் மாஸ்க் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவருக்கு, தேவையான மருத்துவச் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது.

    அறிக்கை

    அறிக்கை

    இந்நிலையில், இது தொடர்பாக மருத்துவமனை வட்டாரங்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, "கொரோனா தொற்று காரணமாக முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்றைய தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா தொற்றுக்கான சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டன. அவரது உடல் நலம் நன்கு தேறியுள்ளது. முதல்வர் விரைவாக நலமடைந்து வருகிறார். மேலும், சில நாட்கள் ஓய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம்" என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

     கொரோனா வேக்சின்

    கொரோனா வேக்சின்

    இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் இன்று பிரதமர் மோடி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். முதல்வர் ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்களை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

     அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    18-59 வயது பிரிவினருக்கான இலவச பூஸ்டர் டோஸ் அரசு மருத்துவமனைகளில் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. இந்த முகாம் எழும்பூர் குடும்ப நலத்துறை பயிற்சி மையத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் முன்னிலையில் தொடங்கியது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இதில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு இரண்டு தடுப்பூசிகளும் போடப்படுகின்றன.

     பூஸ்டர் டோஸ்

    பூஸ்டர் டோஸ்

    4.6 கோடி பேருக்கு மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. 97% பேர் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது. 87.35% பேர் இரண்டாவது தவணை செலுத்தியுள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. செப்டம்பர் 30ம் தேதிக்குள் 30 லட்சம் தடுப்பு மருந்துகள் காலாவதியாகும் நிலையில் உள்ளன. எனவே அதை மக்களுக்குப் பயன்படுத்த இலவச பூஸ்டர் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்,

     வேக்சின் முகாம்

    வேக்சின் முகாம்

    மேலும், தமிழ்நாட்டில் இப்போது பரவும் கொரோனா பாதிப்பு குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், "கடந்த மூன்று மாதங்களாகத் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எதுவும் ஏற்படவில்லை. மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் தான் இருந்து வருகிறது. மேலும், வரும் காலத்தில் மெகா தடுப்பூசி முகாம் மாதத்துக்கு இரண்டு முறை நடத்த முடிவு செய்துள்ளோம்" என்றார்.

     எப்போது டிஸ்சார்ஜ்

    எப்போது டிஸ்சார்ஜ்

    தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் சிகிச்சை தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "முதல்வர் உடல்நிலை நன்றாக உள்ளது, இன்று அல்லது நாளை வீடு திரும்புவார்" என்றார். மேலும், கேரளாவில் மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், கருமுட்டை விவகாரத்திலும் விரைவில் மருத்துவமனைகளுக்குச் சீல் வைக்கப்படும் என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+