அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்.. அன்னதானம், பிரசாதங்களை கொடுக்கும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
சென்னை: கோயில் விழாக்களில் அன்னதானம், பிரசாதம் வழங்க இருக்கும் பக்தர்களுக்கு தமிழக அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சித்திரை திருவிழா வரும் மே 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை நதியில் இறங்கும் வைபவமும் நடக்கும். இந்த வைபவத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் மதுரை சித்திரை திருவிழாவை பொருத்தமட்டில் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை பக்தர்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் மதுரை மாநகர சுகாதார அலுவலர், மதுரை அரசு மருத்துவமனை முதல்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். லட்சக்கணக்கில் மக்கள் கூடும் இந்த விழாவில் எந்த விதமான தொற்று நோய் பாதிப்பும் வராத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. திருவிழா நடக்கும் பகுதிகளில் சுமார் 1580 மாநகர பணியாளர்கள் மற்றும் 160 சிறப்பு பணியாளர்கள், கூடுதலா 1800 பேர் என தூய்மை பணியில் ஈடுபடுவர்.
பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கப்படும். இதை உறுதி செய்ய 23 சிறப்பு குழுக்கள் அமைத்து குடிநீரில் குளோரின் அளவு சரிபார்க்கப்படும். தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசுக்கள், புழுக்கள், அதன் முட்டைகளை நீக்க பணிகள் நடைபெறுகிறது.
மக்கள் கூடும் இடங்களில் புகை மருந்து அடித்தல், கொசு மருந்து அடித்தல், பிளீச்சிங் பவுடர் தூவுதல் உள்ளிட்டவையும் நடைபெறுகிறது. அது போல் ஆங்காங்கே குவிக்கப்படும் உணவு கழிவுகளில் ஈக்கள் குவியும். அதை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திருவிழா காலங்களில் உணவகங்கள், அன்னதானம் செய்யும் இடங்கள, குளிர்பானம் தயாரிக்கும் இடங்கள் உள்ளிட்டவை சுகாதாரமாக இருக்கின்றனவா என்பதை 7 சிறப்புக் குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

கள்ளழகரை ஒட்டி ஒரு 108 ஆம்புலன்ஸ் வாகனமும் பயணிக்க உள்ளது. கோயில் சார்பில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பக்தர்களால் வழங்கப்படும் பிரசாதங்கள், சர்பத், மோர், குளிர்பானங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கிறதா என கண்காணிக்கப்படும். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலித்தீன் பைகளை முழுமையாத தவிர்க்கப்பட வேண்டும்.
திருவிழாவின் போது மண்டகப்படிகளில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்குபவர்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெற்று மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி பெற்று மட்டுமே உணவகங்கள், குளிர்பான கடைகள் இயங்க வேண்டும். உணவு, குளிர்பானங்கள் விவகாரத்தில் ஏதேனும் புகார் இருந்தால் 9444042322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் கொடுக்க வேண்டும். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் எந்தவித அசம்பாவிதம் இல்லாமல் நடைபெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications