“சின்னக் கலைவாணர் விவேக் சாலை”.. பெயர் பலகை திறக்கப்பட்டது..கருணையே வடிவமான முதல்வர் என உருக்கம்.!
சென்னை : மறைந்த நடிகர் விவேக் வீடு அமைந்துள்ள சாலை "சின்னக் கலைவாணர் விவேக் சாலை" என பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், பெயர் பலகையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
தமிழ் சினிமா கண்டெடுத்த நகைச்சுவை நடிகர்களில் தனக்கென்று தனி வழியை கடைப்பிடித்தவர் சின்னக் கலைவாணர் விவேக். தனது நகைச்சுவையால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த அவர் மரக்கன்றுகள் நடுவதில் மிகவும் ஆர்வம் காட்டினார்.
சாதி, மத, மூடநம்பிக்கைகளை எதிர்த்து தனது காமெடி காட்சிகளின் வழியே சாமானியர்களுக்கும் நல்ல செய்தியை, விழிப்புணர்வை கொண்டு சென்ற அவர் இறுதிநாட்கள் வரை சமூகப் பணி மேற்கொண்டார்.

நடிகர் விவேக்
இந்நிலையில் கடந்தாண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக விவேக் திடீரென உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகத்தினரையும், மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த மாதம் 17ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.

பெயர் வைக்க கோரிக்கை
இந்த நிலையில் நடிகர் விவேக்கின் மனைவி அருட் செல்வி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தித்து கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் நடிகர் விவேக் இல்லம் அமைந்திருக்கும் சாலைக்கு விவேக்கின் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் நடிகர் விவேக்கின் மனைவி அருட் செல்வி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தித்து கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் நடிகர் விவேக் இல்லம் அமைந்திருக்கும் சாலைக்கு விவேக்கின் பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அரசாணை வெளியீடு
தமிழக அரசும், தமிழக முதல்வருமான ஸ்டாலினும் நடிகர் விவேக்கின் மனைவி வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என்ற பலத்த எதிர்பார்ப்பில் திரைத்துறையினரும் விவேக்கின் ரசிகர்களும் இருந்த நிலையில் அவரது கோரிக்கையை ஏற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

பெயர் பலகை திறப்பு
இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் "சின்னக் கலைவாணர் விவேக் சாலை" என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பெயர் பலகையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் ப்ரியா, நடிகர் விவேக்கின் மனைவி, மகள்கள், நடிகர் பூச்சி முருகன், நடிகர் தாமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மேடையில் வைக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்கின் படத்திற்கு ஏராளமானோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications