சசிகலா ஜெயிலிருந்து வந்த போதும் கூட்டம் வந்தது.. விஜயெல்லாம் மேட்டரே இல்ல! அமைச்சர் மூர்த்தி சுளீர்
மதுரை: தமிழகத் தலைவர் விஜயின் பிரச்சாரத்துக்குக் கூட்டம் வந்ததாகச் சொல்கின்றனர். 2011ல் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காகப் பிரச்சாரம் செய்ய வந்த நடிகர் வடிவேலுவைப் பார்க்கக் காடு, கரை என மக்கள் கூட்டம் வந்தது எனவும், சசிகலா கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்தபோது சாலை எங்கும் கூட்டம் இருந்தது என அமைச்சர் மூர்த்தி பதிலடி கொடுத்துள்ளார்.
மதுரையில் இன்று தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி வழங்காதது, நீட் தேர்வு ரத்து ஆகிய கோரிக்கைகளுக்காக ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்களைக் கொண்டு போராட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்.
விஜய் பிரச்சாரத்திற்குக் கூட்டம் வருவதைப் பற்றி நாங்கள் பேசவில்லை. 2011ல் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காகப் பிரச்சாரம் செய்ய வந்த நடிகர் வடிவேலுவைப் பார்க்கக் காடு, கரை என மக்கள் கூட்டம் வந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவின் தேர்தல் பணிகளைத் தொடங்க உத்தரவிட்டுள்ளார்.

விஜய் கூட்டம்
திமுக மாவட்டந்தோறும் சட்டமன்றத் தேர்தல் பணிகளைத் தொடங்கி உள்ளது. விஜய் பிரச்சாரப் பயணம் குறித்து தமிழகத்தில் மிகப்பெரிய நடிகராக உள்ள ரஜினிகாந்தே பேசியுள்ளார். அதற்குப் பின்னர் நாங்கள் என்ன பேசுவது? விஜயினால் திமுகவின் வாக்கு வங்கி பாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகி சென்னை வரும்போது விடிய விடிய மக்கள் கூட்டம் வந்தது.
அமைச்சர் மூர்த்தி
ஆகவே கூட்டங்களை வைத்து அரசியல் பேசுவது சரியாகாது. மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் மக்களுக்கான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதிமுக திட்டங்கள் கொண்டு வந்ததா? திமுக திட்டங்கள் கொண்டு வந்ததா? என மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி மக்களிடம் கேட்டுப் பாருங்கள். செல்லூர் ராஜு சட்டமன்ற உறுப்பினராக உள்ள மதுரை மேற்கு தொகுதியில் சாலை, குடிநீர் வசதி மட்டுமல்லாமல் 744 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முக ஸ்டாலின்
மதுரை மேற்கு தொகுதியில் திமுக அரசு செய்த திட்டங்களை மக்களிடமே கேட்டுப் பாருங்கள். மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ அவரை 100 சதவீதம் வெற்றி பெறச் செய்ய பாடுபடுவோம். தொகுதிகளில் மக்களுக்கான பணிகளை நாங்கள் செய்து வருகிறோம், அதற்கான பலன்கள் எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். சட்டமன்றத் தொகுதிகளில் பாகுபாடு பார்த்துப் பணிகள் செய்வதில்லை. அனைத்து மக்களுக்கும் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்களின் கீழ் மக்களுக்கான பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
026 தேர்தல்
மதுரை மாவட்டத்திலுள்ள அரசு அதிகாரி ஒருவர் சார்ந்து பணி செய்கிறார் என்ற சு.வெங்கடேசன் எம்பியின் கருத்துக்கு அவர் தான் பதில் அளிக்க வேண்டும். மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் அரசின் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதா? திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதா? என்பதைப் பத்திரிக்கையாளர்களை அழைத்துச் சென்று காண்பிக்க நான் தயாராக உள்ளேன். மதுரை மாவட்டத்தில் எந்த ஒரு அதிகாரியும் பாரபட்சமாகச் செயல்படவில்லை, மக்களுக்கான திட்டங்களைச் செய்து வருகின்றனர். மதுரையின் மாஸ்டர் பிளான் திட்டம் 20 நாட்களுக்குள் வெளியிடப்படும்" என்றார்.
-
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி!











Click it and Unblock the Notifications