பொன்முடி வீட்டில் இருந்த போர்டு.. “நானே வந்து அகற்றுவேன்”.. சவால் விட்ட பாஜக நிர்வாகி.. உடனே மாயம்!
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட பிறகும், அமைச்சர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பலகை இன்னும் நீக்கப்படவில்லை, நானே வந்து அகற்றுவேன் என பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா ஆவேசமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமைச்சர் எனக் குறிப்பிட்டிருந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளது.
கடந்த 2006 - 2011 வரை திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து கடந்த 2016ல் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இருவரையும் விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து கடந்த 19ஆம் தேதி தீர்ப்பளித்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 30 நாட்கள் அவகாசத்திற்கு பின் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி இப்போதைக்கு சிறை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் பொன்முடி, அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவிகளை இழந்துவிட்டார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, எம்.பி, எம்எல்ஏக்கள் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டாலே அவர்கள் தகுதி இழப்பு செய்யப்படுவார்கள். அந்த வகையில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு, 3 ஆண்டுகள் சிறை, ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமைச்சர், எம்எல்ஏ பதவிகளை பொன்முடி இழந்துள்ளார். மேலும், 6 ஆண்டுகளுக்கு தேர்தலிலும் போட்டியிட முடியாது.
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்டு, அவர் கவனித்து வந்த உயர்கல்வித்துறை இலாகா, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொன்முடி வீட்டின் முன்புற சுவரில், உயர்கல்வித்துறை அமைச்சர் எனக் குறிப்பிட்டு பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது இன்னும் அகற்றப்படவில்லை என பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.
"எச்சரிக்கை!! தி.மு.க பொன்முடி ஊழல் நிரூபணமாகி, பதவி பறிக்கப்பட்ட பிறகும் "உயர் கல்வித்துறை அமைச்சர்" பலகை அவர் இல்லத்தில் இருந்து நீக்கப்படவில்லை. இது அப்பட்ட விதிமீறல், அதிகார துஷ்ப்ரயோகம் முதல்வரே! இப்பலகை எடுக்கப்படவில்லை என்றால் நான் நேரடியாக வரவேண்டியதாகி விடும்." என அவர் பெயர் பலகையின் புகைப்படத்தையும் பதிவிட்டு தெரிவித்தார்.

இதையடுத்து, பொன்முடி வீட்டில் இருந்த அந்த பெயர்ப்பலகை உடனடியாக அகற்றப்பட்டுளது. இதன் புகைப்படத்தை மீண்டும் பதிவிட்ட எஸ்.ஜி.சூர்யா, "முன்னாள் அமைச்சர் பொன்முடி வீட்டின் வாசலில் வைக்கப்பட்டிருந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி என்ற பெயர் பலகை நீக்கப்பட்டது." எனத் தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல், சட்டப்பேரவை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதையடுத்து, அமைச்சர் பதவி இழப்பு மற்றும் எம்எல்ஏ பதவி தகுதியிழப்பு குறித்து அரசிதழில் சட்டப்பேரவை செயலகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும். பொன்முடியின் எம்எல்ஏ பதவி தகுதி இழப்பு அறிவிக்கப்பட்டதும், அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியாகியுள்ளதாக அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை செயலகம் பரிந்துரைக்கும். இந்த பரிந்துரையை ஏற்று தேர்தல் ஆணையம் இதற்கான அறிவிப்பை வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications