"தஹி நஹி".. ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் பெயர் அச்சிடப்படாது- தமிழக அரசு திட்டவட்டம்
சென்னை: ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் தஹி என அச்சிடப்படாது என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
தென் மாநிலங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து இல்லாவிட்டாலும் அவ்வப்போது இந்தியை திணிக்கும் போதும் எதிர்ப்புகளும் வலுக்கத்தான் செய்கின்றன.
அதாவது தமிழ் மட்டுமல்லாமல் பிராந்திய மொழிகளின் பயன்பாட்டையே குறைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தென் மாநிலங்களில் மட்டும் அல்லாமல் வடமாநிலங்களில் அதுவும் இந்தி பேசாத மாநிலங்களில் கூட இந்தி மொழி ஆதிக்கம் செலுத்துவதாக கூறப்படுகிறது.

ரயில்நிலையம்
ரயில்நிலையம், விமான நிலையம் உள்ளிட்ட பொது மக்கள் கூடும் இடங்களில் கூட இந்தி மொழியில் அறிவிப்பு பலகை வைக்கப்படுவதால் அந்தந்த பிராந்திய மொழிக்காரர்களில் ஆங்கிலம் தெரியாத நபர்கள் படித்து விவரங்களை தெரிந்து கொள்வதில் சிரமம் எழுந்துள்ளது. மேலும் தமிழகத்தில் மும்மொழி கொள்கை மூலம் இந்தியை திணிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இரு மொழி கொள்கை
தமிழகத்தில் இரு மொழி கொள்கை பின்பற்றப்படும் நிலையில் மும்மொழி கொள்கையை மத்திய அரசு திணிப்பதாக சொல்லப்படுகிறது. அது போல் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழு கூட்டத்தில் அமைச்சர் அமித்ஷா பேசியபோது, இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்தியாவின் மொழி
இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள பயன்படுத்த வேண்டும். இந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழி, இணைப்பு மொழி என்றும் பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்ட போது தமிழ்தான் இணைப்பு மொழி என்று பதில் அளித்தார்.

இந்தி திணிப்பு
அது போல் இந்தி திணிப்பு வரும் போதெல்லாம் இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக்குகள் டிரென்டாகின்றன. பிரபலங்கள் இந்த வாசகம் பொரித்த டீசர்ட்டுகளை அணிந்து இந்தி திணிப்பை எதிர்த்தனர். இந்த நிலையில் ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் தஹி என எழுதுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கூட்டுறவு சங்கங்கள்
அரசு கூட்டுறவு சங்கங்களான ஆவின் (தமிழகம்), நந்தினி (கர்நாடகா), பான்லே (புதுவை) ஆகிய நிறுவனங்களின் தயிர் பாக்கெட்டுகளின் மீது தஹி என இந்தியில் எழுத மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கன்னடத்தில் தயிருக்கு மோசரூ என்றும் தமிழில் தயிர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பிராந்திய பெயர்கள்தான் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தஹி என அச்சிடுமாறு உத்தரவிட்டிருந்தது.

தஹி
ஆங்கிலத்தில் curd என எழுதி அதன் கீழ் தஹி என எழுதுமாறும், வேண்டுமானாலும் அடைப்புக்குறிக்குள் பிராந்திய மொழிகளில் எழுதி கொள்ளுமாறும் அந்த ஆணையம் தெரிவித்திருந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு தமிழகத்திலும் கர்நாடகாவிலும் கடும் எதிர்ப்பு கிளம்பின. இதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

தயிர் பாக்கெட்டுகள்
இது போல் தயிர் பாக்கெட்டுகளில் கூட இந்தி திணிப்பை அனுமதிக்க முடியாது என தெரிவித்தன. இந்த நிலையில் இதுகுறித்து பால்வளத் துறை அமைச்சர் நாசர் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தயிர் பாக்கெட் மீது தஹி என இந்தியில் அச்சிடப்படாது. மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உத்தரவை தமிழக அரசு ஏற்கவில்லை என திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications