சரசரவென பேச்சுக்கு இடையே.. சட்டென தமிழ்நாட்டு இளைஞரை பற்றி பேசிய நிர்மலா.. யார் அவர்? என்ன சொன்னார்?
சென்னை: 2024 மத்திய இடைக்கால பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட்டில் பகிர்ந்த சில விஷயங்கள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன.
இன்று புதிய நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டில் 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிக்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3000 ஐ.டி.ஐக்கள் தொடங்கப்பட்டுள்ளன.

4 தரப்பு முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. சமூக நீதியே பாஜக அரசின் பிரதான நோக்கம். 2024-ல் புதிய இந்தியாவை படைப்போம் சமூக நீதியே பாஜக அரசின் பிரதான நோக்கம். 2047ல் புதிய இந்தியாவை படைப்போம்.
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் என 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஊழல் எதிர்ப்புக்கும், வாரிசு அரசியலுக்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வளர்ச்சி பாதையில் பயணிக்கிறது. பாஜகவுக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என நம்பிக்கை உள்ளது.
நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்தபோது ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். தற்போது நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. மகளிர் இட ஒதுக்கீடு, முத்தாக் தடை போன்ற பெண்களுக்கான சட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது.
கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் தடுமாறிய நிலையில், இந்தியா சிறப்பாக கையாண்டது. வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு 2027-ல் நனவாகும். ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் ஆகிய 4 தரப்பின் முன்னேற்றத்திற்கு பாஜக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது.34 லட்சம் கோடி உதவித்தொகை நேரடியாக ஏழை மக்களின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பணவீக்கம் அதிகமாக இருந்தபோது ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். தற்போது நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது, என்று குறிப்பிட்டார்.
பிரக்ஞானந்தா: அவர் தனது பேச்சுக்கு இடையே தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா பற்றி பேசினார்.

செஸ் உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் அமெரிக்க வீரர் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி தமிழக வீரர் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அதில் மேகனஸ் கார்ல்ஸன் உடன் மோதியதை பாராட்டி நிர்மலா சீதாராமன் பேசினார். இந்தியாவின் வெற்றிகளில் அடையாளமாக அவர் மாறி உள்ளார் என்று நிர்மலா சீதாராமன் பாராட்டினார்.
பொதுவாக பட்ஜெட் உரைகளில் தமிழ்நாடு தொடர்பான விஷயங்களை நிர்மலா சீதாராமன் குறிப்பிடுவது வழக்கம். அதேபோல் இன்றும் அவர் தமிழ்நாட்டை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா பற்றி பேசினார். அதோடு முதல்முறையாக மதசார்பின்மை, சமூக நீதியே பாஜக அரசின் பிரதான நோக்கம், மதசார்பின்மையை செயல்திட்டமாக் மாற்றி உள்ளோம் போன்ற வார்த்தை பிரயோகங்களை நிர்மலா சீதாராமன் பேசினார்.












Click it and Unblock the Notifications