நில்லுங்க.. ஓடாதீங்க.. வெளியேற பார்த்த திமுக எம்பிக்கள்.. கிண்டலடித்த நிர்மலா சீதாராமன்.. ஷாக்கிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை எய்ம்ஸ் குறித்த நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இவர்கள் வெளிநடப்பு செய்யும் முன்.. தமிழ்நாட்டை பத்தி நிறைய சொல்லனும் ஓடாதீங்க என்று நிர்மலா சீதாராமன் கூறியது அவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் தரவேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. பிரதமர் மோடி விளக்கம் தராத நிலையில், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காங்கிரஸின் கவுரவ் கோகோய் தாக்கல் செய்திருந்தார். இதனை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றதைத் தொடர்ந்து நேற்றும் இன்றும் விவாதம் தொடங்கி நடந்து வருகிறது.

Minister Nirmala Sitharaman trolls DMK MP who tries to leave parliament amid discussion

நிர்மலா சீதாராமன்: நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்., சார்பில் அசாம் மாநில எம்.பி., கெளரவ் கோகாய் மீண்டும் முன்மொழிந்து நாடாளுமன்றத்தில் பேசினார். இந்த நிலையில் இன்றி நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது மத்திய அமைசர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்து பேசினார். அதில், பொருளாதாரம், பணவீக்க விகிதம் தொடர்பான கருத்துகளை தெரிவிக்க விரும்புகிறேன். கொரோனா பாதிப்பு இருந்த போதும் தேசத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் உலகின் ஐந்து பலவீனமான பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா இருந்தது. ஆனால் 9 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசின் கொள்கைகளால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது.

நாட்டின் பொருளாதார உற்பத்தி, ஏற்றுமதியில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன. ஊழல், வாரிசு அரசியலை முன்வைத்து "இந்தியா" கூட்டணியை உருவாக்கி உள்ளனர். மாநிலங்களில் எதிர்க் கட்சிகளாக இருந்து கொண்டு "இந்தியா" கூட்டணியில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து இடம்பெற்றுள்ளன.

"மாற்றம் என்பது வார்த்தைகளால் உருவாகக் கூடாது- நடைமுறைகளின் மூலம் உருவாக்கப்பட வேண்டும். மக்களுக்கு கனவுகளில்தான் உங்கள் வாக்குறுதிகளைக் காட்டின. நாங்கள் அந்த கனவுகளை நிறைவேற்றி காட்டுகிறோம். 2014, 2019-ல் மக்களே ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீது நம்பிக்கை இல்லை என்ற நிலையை மேற்கொண்டிருந்தனர். அடுத்த 2024 தேர்தலிலும் இதே நிலைமைதான் இருக்கப் போகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா கேட்டதைப் போல எதற்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி பெயரை இந்தியா என மாற்றினீர்கள்? என்ன அவசியம்?.

மதுரை எய்ம்ஸ்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 1977 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; ரூ 1627 கோடி கடனுதவியுடன் மத்திய அரசு கட்டுகிறது; மத்திய அரசின் கடனுதவி திட்டம்- தம்ழிநாடு அரசுக்கு எந்த கடனும் இல்லை; அதனால் தயவு செய்து மதுரை எய்ம்ஸ் குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம். பொதுவாக 750 படுக்கைகள்தான் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இருக்கின்றன; ஆனால் தமிழ்நாடு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 900 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்படுகின்றன. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 50 மாணவர்கள் ஏப்ரல் 2022 முதல் படித்து வருகின்றனர்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 1977 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ 1627 கோடி மத்திய அரசு கடன் அளித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக மொத்தம் 900 படுக்கைகள். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தமிழ்நாடு அரசுக்கு கடன் சுமையே இல்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவகல்லூரி மாணவர்கள் 2022 முதல் படித்து வருகின்றன, என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்ராமன் பேசினார்.

இதையடுத்து திமுக எம்பிக்கள் உள்ளிட்ட தமிழ்நாடு எம்பிக்கள் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எய்ம்ஸ் எங்கே எங்கே என்று கேள்வி எழுப்பினர். இதை தொடர்ந்து தமிழ்நாடு எம்பிக்கள் வெளியேற முற்பட்ட போது குறுக்கிட்ட நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டை பத்தி நிறைய சொல்லனும் ஓடாதீங்க. இருந்து கேளுங்க என்று நிர்மலா சீத்ராமன் கூறினார்.

இதையடுத்து மதுரை எய்ம்ஸ் குறித்த நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+