TNEA Counselling date: பி.இ., பி.டெக் கவுன்சிலிங் ஜூலை 2 முதல் தொடங்கும்..பொன்முடி அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். பொறியியல் படிப்பிற்கான முதலாம் ஆண்டு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 24 தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு மாதம் முன்னதாகவே ஜூலை 2ஆம் தேதியே கலந்தாய்வு தொடங்கும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2023-24-ம் கல்வியாண்டில் முதலாமாண்டு B.E / B.Tech / B.Arch ஆகிய பொறியியல் பட்டப்படிப்பிற்கு சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து B.E / B.Tech / B.Arch பட்டப்படிப்பிற்கு அரசு/ அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப செயல்முறை முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் TNEA Facilitation centre (TFCs) அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். மே 5ஆம் தேதி தொடங்கி ஜூன் 4 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு பதிவுக் கட்டணமாக OC / BC / BCM / MBC & DNC பிரிவு விண்ணப்பதார்கள் ரூ.500 மற்றும் SC / SCA / ST பிரிவு விண்ணப்பதார்கள் ரு.250 செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் செலுத்த இயலாத மாணவர்கள் The Secretary TNEA payable at chennai என்ற பெயரில் வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம். மாணவர்கள் கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே அறிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும்பொருட்டு, தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை தேர்வு செய்து கொள்ளவேண்டும். சான்றிதழ்கள் இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், மாணவர்களின் பதிவு செய்த அலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும். அதன் பெயரில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் TFC மையத்திற்கு நேரடியாக வந்து சரிசெய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் B.E., B.Tech (Lateral Entry and Part Time) பட்டப் படிப்புகள் சேர்க்கைக்கான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் சந்தேகங்களுக்கு 044 - 2235 1014 / 1015 மற்றும் 1800 - 425 - 0110 என்ற தொலைப்பேசி எண்களுக்கும் என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு முன்பு அறிவிக்கப்பட்ட தேதியை விட ஒரு மாதம் முன்னதாக ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவித்தார். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நீட் தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளது எனவே பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கும் தேதி மாற்றப்பட்டதாகவும் கூறினார்.
முன்னதாக தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை கடந்த மாதம் அறிவித்தது ரேண்டம் எண் ஜூன் 7ஆம் வெளியாகும் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 12 முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 12ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டி, கால அட்டவணையை மாணவர்கள் இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூலை 2ஆம் தேதி பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு ஜூலை 2ஆம் தேதி முதல் தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications