3,5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையா? மாநில கல்விக் கொள்கை நோக்கமே அதுதான்.. பொன்முடி பேச்சு!
3,5,8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையா என்று பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: 3, 5, மற்றும் 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேவையா என்று அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் நாங்கள் எந்த மொழிக்கும் எதிரிகள் இல்லை என்று கூறிய பொன்முடி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தை கட்டாயம் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
பாரதி மகளிர் கல்லூரியின் 52வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், தமிழ்நாட்டின் மாநிலக் கொள்கையை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் அண்ணா இருமொழிக் கொள்கையை கொண்டு வந்தார்.

இருமொழிக் கொள்கை
நாங்கள் எந்த மொழிகளுக்கும் எதிரிகள் இல்லை. பிற மொழிகளை கட்டாயமாக்காமல் இருந்தால் போதும். ஆங்கிலம், தாய்மொழி மட்டும் கட்டாய பாடமாக இருக்க வேண்டும். பாரதி மகளிர் கல்லூரியில் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதில் எந்த தவறும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம். இருமொழிகளை படிப்பதற்கே கடினமாக இருக்கிறது. வேறு மாநிலங்களுக்கும், வேறு நாடுகளுக்குள் செல்ல வேண்டும் என்றால் ஆங்கிலம் இருந்தாலே போதும்.

குழந்தைகளுக்கு பொதுத்தேர்வு
தாய் மொழி நம்முடன் பிறந்த மொழி. அதனை அறிந்துகொள்ள வேண்டும். அண்ணாவின் வழியில் நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்விக் கொள்கையை உருவாக்கி அந்த அடிப்படையில் மாணவர்கள் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் புதிய கல்விக் கொள்கை என்று கொண்டு வந்துள்ளார்கள். அதில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அப்படி பொதுத்தேர்வு நடத்தினால், எத்தனை பேர் அடுத்தக் கட்டத்திற்கு நகர்வார்கள்.

நுழைவுத் தேர்வு
அதுமட்டுமல்லாமல் பி.ஏ, பி.எஸ்.சி படிப்புகளில் சேர்வதற்கு கூட நுழைவுத் தேர்வு வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதேபோல் நீட் தேர்வு நடத்தி வருகிறார்கள். அதனை மாற்ற வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை. அதனை மாற்ற வேண்டும் என்பதற்காக தான் தமிழ்நாடு கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே உயர்கல்வியில் 53 சதவிகிதம் அதிகம் பெற்று தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மொத்த கல்வியில் தமிழ்நாட்டுக்கு 2ம் இடம்.

தமிழ்நாடு அரசின் நோக்கம்
இதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சி. மாணவிகள் அனைவரும் அடுத்த உயர்கல்வி படிக்க வேண்டும். அதுதான் தமிழ்நாடு அரசின் நோக்கம். அதற்காகவே புதுமைப் பெண் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நாங்கள் படிக்கும் போது ஒரு வகுப்பில் ஒரு பெண் தான் இருந்தார். ஆனால் இன்று ஒரு வகுப்பில் அதிகளவில் பெண்களே இருக்கிறார்கள். யாரையும் அரசியலுக்கு எதிர்க்கவில்லை என்று தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications