தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் ஆனார் அமைச்சர் பொன்முடி மகன்.. எதிர்த்து நின்றவர் திடீர் வாபஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் டாக்டர். அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அசோக் சிகாமணியை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்த பிரபு தலைமையிலான குழுவினர் இன்று வாபஸ் பெற்றதையடுத்து அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அசோக் சிகாமணி 2019ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை தலைவராக செயல்பட்டு வந்துள்ளார். விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராகவும் இருந்துள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளராக பழநி, பொருளாளராக சீனிவாச ராவ், துணை செயலாளராக பாபா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக கடந்த 2019ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட ரூபா 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்து வந்தது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணைத் தலைவராக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி இருந்து வந்தார்.

அமைச்சர் மகன்

அமைச்சர் மகன்

அமைச்சர் பொன்முடியின் மகனான அசோக் சிகாமணி பல ஆண்டுகளாகவே கிரிக்கெட் சங்க தொடர்பில் இருக்கிறார். விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். 2019லேயே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ஆவதற்கு முயற்சி மேற்கொண்டார் அசோக் சிகாமணி. அப்போது இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனின் மருமகள் ரூபா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக அசோக் சிகாமணியிடம் பேச்சுவாரத்தை நடத்தி அவரை துணைத் தலைவர் ஆக்கினர்.

 தலைவர் தேர்தல்

தலைவர் தேர்தல்

இந்நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தல் இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் அணியின் சார்பில் வேட்பாளராக டாக்டர் அசோக் சிகாமணி களம் இறங்கினார்.அசோக் சிகாமணிக்கு, பிசிசிஐ தலைவர் ஜெய்ஷாவின் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது. அசோக் சிகாமணிக்கு எதிராக எஸ்.பிரபு களம் இறங்கினார்.

 போட்டியின்றி தேர்வு

போட்டியின்றி தேர்வு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பலம் மிக்க இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் அணியை சேர்ந்த அசோக் சிகாமணியை எதிர்த்து போட்டியிடவிருந்த பிரபு இன்று தனது மனுவை வாபஸ் பெற்று தேர்தலில் இருந்து ஒதுங்கினார். இதையடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் அசோக் சிகாமணி.

முக்கிய பதவி

முக்கிய பதவி

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளராக பழநி, பொருளாளராக சீனிவாச ராவ், துணை செயலாளராக பாபா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சரும் திமுக துணை பொதுச் செயலாளருமான பொன்முடியின் மூத்த மகன் கௌதம சிகாமணி கள்ளக்குறிச்சி எம்.பியாக இருந்து வரும் நிலையில், இளைய மகன் அசோக் சிகாமணி தற்போது கிரிக்கெட் சங்கத்தில் முக்கிய பதவிக்கு வந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+