விஷயம் மேல போயிடுச்சு.. ஆளுநர் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்வது அவருக்கு நல்லது : அமைச்சர் பொன்முடி
சென்னை : தமிழ்நாடு அரசை கலந்தாலோசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி சில விஷயங்களை செய்கிறார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் முறையிட்டுள்ளோம். ஆளுநர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வது அவர்களுக்கு நல்லது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கை குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, வரும் 5ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க துணைவேந்தர்களுக்கு ஆளுநர் அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வது அந்தந்த பல்கலைக்கழக துணைவேந்தர்களின் தனிப்பட்ட விருப்பம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மாநில கல்விக்கொள்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 19 பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
துணை வேந்தர்களுடனான ஆலோசனைக்கு பின் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறுகையில், "மாநில அரசை ஆலோசிக்காமல் தமிழ்நாடு ஆளுநர் தன்னிச்சையாக செய்லபடுகிறார். ஆளுநர் உடனான ஆலோசனையில் பங்கேற்பது துணைவேந்தர்களின் சொந்த விருப்பம். தேசிய கல்வி கொள்கையின் சிறப்பம்சங்களையும் மாநில கொள்கையில் கொண்டு வருவோம்." என தெரிவித்தார்.
மேலும் பேசிய அமைச்சர் பொன்முடி, "தமிழ்நாடு அரசை கலந்தாலோசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி சில விஷயங்களை செய்வது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் முறையிடப்பட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலுமே அந்தந்த மாநில கல்விக் கொள்கையை வகுத்து வருகின்றன. கர்நாடகாவிலும் தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்துள்ளது அம்மாநில அரசு. ஆளுநர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வது அவர்களுக்கு நல்லது" எனத் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications