ஆளுநர் மாளிகைக்கு ஆர்.என்.ரவி செல்வதற்கு முன்பே மைக் ஆஃப்னு விளக்கம் வந்தது எப்படி? ரகுபதி கேள்வி
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநர் உரையாற்றும் போது மைக்கை யாரும் ஆஃப் செய்யவில்லை என்றும் ஆளுநர் வெளியேறிய அடுத்த நிமிடமே ராஜ்பவனில் இருந்து விளக்கம் எப்படி வந்தது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. பொதுவாக ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இன்றும் ஆளுநர் உரையாற்ற வந்திருந்தார்.

அப்போது அவர் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என கேட்டார். அதற்கு சட்டசபை சபாநாயகரோ , தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதுதான் தமிழக சட்டசபையின் மரபு என மறுத்தார்.
இதனால் ஆளுநர் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறிவிட்டார். மேலும் ஆளுநர் வெளியேறியது ஏன் என்பது குறித்து 13 காரணங்களை குறிப்பிட்டு ஆளுநர் மாளிகை ஒரு விளக்கமளித்துள்ளது.
அதில் முதல் காரணமாக ஆளுநர் உரையின் போது மைக் ஆஃப் செய்யப்பட்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆளுநர் உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருப்பதாவது: ஆளுநர் ரவியின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை. அப்படி செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவதுதான் சட்டசபையின் மரபு. ஆனால் ஆளுநர் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்கிறார். இதற்கு மறுப்பு சபாநாயகர் அப்பாவு மறுத்துவிட்டார். அவர்தான் அவையை நடத்துபவர், எனவே அப்பாவு மரபை சுட்டிக் காட்டி மறுத்துவிட்டார்.
சட்டசபையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறிய 10 நிமிடங்களுக்குள் எப்படி ஆளுநர் மாளிகையில் இருந்து விளக்கம் வெளியாகும்? எனவே முன்கூட்டியே அந்த விளக்கத்தை தயாரித்து வைத்துவிட்டனர் என்பது நன்றாக தெரிகிறது. இவ்வாறு ரகுபதி தெரிவித்தார்.
ரகுபதி மேலும் பேசுகையில்,
"ஆளுநர் அறிக்கையை வாசிக்காமல், தானாக ஏதாவது வார்த்தைகளைச் சொல்லி பிரச்சனையை கிளப்ப முடியுமா என்று பார்த்தார். சட்டப்பேரவைத் தலைவர் எவ்வளவு தாழ்ந்து கேட்க முடியுமோ, அந்த அளவுக்கு ஆளுநர் அறிக்கையை வாசிக்கச் சொல்லி கேட்டார். ஆனால் ஆளுநர் வெளியேறிவிட்டார்.
அவர் மைக் ஆஃப் செய்யப்பட்டதாகக் கூறுகிறார். அது சுத்தமான பொய், ஆளுநர் தமிழக அரசிற்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்கிறார். 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்திருப்பதாக நாங்கள் சொல்கிறோம். தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்திருப்பதை மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது.
தொழில் வளர்ச்சி இல்லை என்றால் 11.9% பொருளாதார வளர்ச்சியை அடைவது சாத்தியமில்லை. ஆனால் ஆளுநர் உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறுகிறார். ஆளுநர் வெளியேறிய சில நிமிடங்களிலேயே மூன்று பக்க அறிக்கை வந்தது எப்படி. எல்லாம் திட்டமிடப்பட்ட வேலைகள். 2026 தேர்தலில் ஆட்சியைப் பற்றி குறை சொல்ல வேண்டும் என்பது அவருடைய கனவு.
ஆளுநரின் செயல்பாடுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.போதை பொருள் தமிழ்நாட்டில் உற்பத்தி கிடையாது. அது எங்கிருந்து வருகிறது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். தமிழ்நாடு அரசு போதைப்பொருளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
கல்வித் தரம் சரியில்லை என்ற ஆளுநர் குற்றம்சாட்டுகிறார். இந்தியாவில் இருக்கக்கூடிய 100 பல்கலைக்கழகங்களில் 18 தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. உயர்கல்வி படிக்கிற பெண்களுடைய எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடு.
பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கிறேன். உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்த பயப்பட வேண்டும்? செப்டம்பர், அக்டோபரில் தேர்தல் நடைபெறும்.
கோயிலுக்கு அறங்காவலர் நியமிக்கப்படவில்லை என்கிறார் ஆளுநர். ஆனால் 3163 ஆலயங்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வருகின்றன. பல கோயில்களுக்கு நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கின்றன. அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டு செயலாற்றி வருகின்றனர்.
தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக ஆளுநர் கூறிய கருத்துக்கு, "முதலில் தமிழ் தாய் வாழ்த்து, இறுதியில் தேசிய கீதம் என்பதுதான் மரபு. நாங்கள் மரபை மீறவில்லை. மரபை பின்பற்றியே அனைத்தும் நடந்ததாக ரகுபதி குறிப்பிட்டார்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications