7 பேர் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதியை நிர்பந்திக்க முடியாது -சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
சென்னை: பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் குடியரசுத் தலைவரை நிர்பந்திக்க முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மதுரையில் உள்ள மத்திய சிறைச்சாலையை ஆய்வு மேற்கொண்ட அவர் அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறினார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக, தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கை தற்போது குடியரசுத் தலைவர் கையில் உள்ள நிலையில், அவரை நிர்பந்திக்க முடியாது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆட்சியில் 7 பேர் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் பன்வாரிலால் உரிய முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியதாக அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார்.
7 பேர் விடுதலை விவகாரத்தில் சிலர் சட்டச் சிக்கலை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்றும் தமிழக அரசு எந்த சட்டச் சிக்கலிலும் சிக்கிக் கொள்ளாது எனவும் தெரிவித்துள்ளார். இதேபோல் நீட் தேர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர்,
நீதிமன்றத்துக்கு எதிராக நீட் குழு அமைக்கப்படவில்லை என்றும் மக்களின் கருத்துக்களை பெறவே இந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்தார். பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டதை போல் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு பரோல் அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு, அவரது தாயார் மனு அளித்தால் இது குறித்து அரசு பரிசீலிக்கும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications