Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் ரூ. 400 கோடி நிலம் அபகரிப்பு.. அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது அறப்போர் இயக்கம் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஜிஎஸ்டி சாலையில் உள்ள ரூ.411 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தனது மகன்கள் மூலம் அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. அறப்போர் இயக்கத்தின் இந்த குற்றச்சாட்டை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தரப்பு மறுத்துள்ளது.

பால்வளத் துறை அமைச்சராக பதவி வகித்து வரும் ராஜ கண்ணப்பன் மீது அறப்போர் இயக்கம் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதாவது, சென்னையில் ரூ. 411 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை அமைச்சர் ராஜகண்ணபன் மற்றும் அவரது மகன்கள் அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

minister-raja-kannappan-illegally-acquiring-govt-land-worth-rs-411-crore-arappor-iyakkam-alleges

அமைச்சர் ராஜ கண்ணப்பன் தன்னுடைய மகன்கள் மூலமாக ரூபாய் ரூ. 411 கோடி மதிப்புள்ள உள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளார். ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் மெட்ரோ அருகே பிஎஸ் என் எல் அலுவலகம் தாண்டியதும் இடது பக்கம் இருக்க கூடிய சுமார்5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கான ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டு இருபதாகவும், இந்த அரசு நிலம் உடனடியாக மீட்கப்படுவதோடு, தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்ளோம் என்று அறப்போர் இயக்கம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர் ராஜ கண்ணப்பனின் அழுத்தம் காரணமாக வருவாய்த்துறை இந்த நிலத்தை மீட்காமல் இருப்பதாகவும் அமைச்சர் ராஜ கண்ணப்பன் தன் மகன்கள் பெயரில் சொத்து சேர்ப்பதற்காக தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இருப்பதாகவும் அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. மேலும் அறப்போர் இயக்கம் சார்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடந்த 2015 ஆம் ஆண்டில் ஆலந்தூர் தாசில்தார், "சர்வே எண் 1353, 1352 மற்றும் பல சர்வே எண்கள் அரசின் காலம் கடந்த குத்தகை நிலங்கள். இவை தற்போது அரசு நிலங்கள் என்றும் இந்த சர்வே எண்களில் எந்தவித பத்திரப்பதிவும் செய்யக்கூடாது" எனக் கூறியிருந்தார். யாராவது பத்திரப்பதிவு செய்திருந்தால் ரத்து செய்து தாசில்தாருக்கு அறிக்கை அனுப்பும்படி சார்பதிவாளர்களிடம் கேட்டுள்ளார்.

பரங்கிமலை கிராமத்தில் உள்ள பெரும்பாலான அரசு நிலங்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த பொழுது சிலருக்கு குத்தகை கொடுத்து பிறகு சுதந்திரம் அடைந்ததும் அந்த நிலங்கள் மீண்டும் அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. டெக்கான் பன் ஐலேண்ட் அண்டு ஓட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் தற்போதைய இயக்குனர்களாக அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மகன்கள் பிரபு, திவாகர் மற்றும் திலீப் குமார் உள்ளனர்.

3 பேரும் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாகவும் உள்ளனர். சர்வே எண் 1353 மற்றும் 1352 ஆகிய நிலங்களை அபகரிப்பதற்காக இந்த நிறுவனம் 1991 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை பல பத்திரப்பதிவுகளை செய்துள்ளது. 4.52 ஏக்கர் அளவுக்கு பத்திரப்பதிவு செய்ததற்கான ஆதாரத்தையும் புகாருடன் இணைத்து அனுப்பி உள்ளோம் என்று அறப்போர் இயக்கம் கூறியது. இந்த நிலையில் அறப்போர் இயக்க புகாருக்கு அமைச்சர் ராஜக்கண்ணப்பன் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளை மறைத்து அவதூறு பரப்பியதாக ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மறைத்து, என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் தவறான தகவல்களை, பத்திரிகைகள் மூலம் அவதூறு பரப்பி வருகிறவர்களை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+