அட சும்மா இருங்கப்பா.. ஸ்டாலின் அண்ணாச்சிக்கி அழகிரின்ற பெயரே ஆகாது.. ராஜேந்திர பாலாஜி கிண்டல்
சென்னை: திமுக தலைவர் முக ஸ்டாலினின் சகோதரர் முக அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி ஆகியோரின் பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முக ஸ்டாலினை மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலில் சீட் ஒதுக்கீடு பிரச்சினையில் திமுகவை விமர்சித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டார். அதில் திமுக கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக அழகிரி குறிப்பிட்டிருந்தார்.
இது திமுக நிர்வாகிகளுக்கும் ஸ்டாலினுக்கும் கோபத்தை உண்டாக்கியது.

சமாதானம்
இதையடுத்து தான் என்ன பேசினார் என்பது குறித்து டெல்லியில் நேரில் சென்று அழகிரி விளக்கமளித்தார். எனினும் திமுக சமாதானம் ஆகவில்லை. இந்த நிலையில் நேர்று திமுக தலைவர் முக ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி நேரில் சந்தித்தார்.

முற்றுப்புள்ளி
இந்த சந்திப்பு குறித்து கே எஸ் அழகிரி கூறுகையில் எங்கள் கூட்டணியில் பிளவு ஏதும் இல்லை. திமுக- காங்கிரஸ் கூட்டணியில் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து பேசியுள்ளோம்.

பிரச்சினை
இனி கருத்து வேறுபாடுகள் எழுந்தால் நானும் ஸ்டாலினும் பேசி தீர்த்து கொள்கிறோம். மற்றவர்கள் பேச வேண்டாம் என்றார் அழகிரி. திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக துரைமுருகனும் டி ஆர் பாலும் கருத்து தெரிவித்த நிலையில் இந்த பிரச்சினை பெரிதாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

பாலாஜி கிண்டல்
ஆனால் ஸ்டாலினும் தர்பார் படம் குறித்து அழகிரியிடம் பேசி கலகலப்பை உண்டு செய்துவிட்டார். எனவே ஆல் இஸ் வெல்லாக அனைத்தும் சுபமாக முடிந்தது. இதை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டல் செய்துள்ளார்.
|
ராஜேந்திர பாலாஜி கிண்டல்
அவர் கூறுகையில் தனது ட்விட்டரில் முக அழகிரி, கே எஸ் அழகிரியை ஒப்பிட்டு கிண்டலாக பதிவு செய்துள்ளார். அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் "அட சும்மா இருங்கப்பா.. ஸ்டாலின் அண்ணாச்சிக்கி அழகிரி என்ற பெயர் ஆகவே ஆகாதப்பா.. அது மதுரை என்றாலும் சரி, கடலூர் என்றாலும் சரி..." என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications