நம்ம கெட்ட நேரம்.. இப்படி ஒரு ஆளுநர் வந்து வாய்ச்சிருக்காரு.. நொந்துகொண்ட அமைச்சர் ரகுபதி!
சென்னை: “நமக்கு கெட்ட நேரம்.. இதுபோன்ற ஆளுநர் நமக்கு வந்து வாய்த்துள்ளார்” என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று (மே 24) மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் திருநாள் விழா நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழில் திருவள்ளுவர் காவி உடை அணிந்து இருப்பது போன்று அச்சிடப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முன்னதாக கடந்த ஜனவரி 16 திருவள்ளுவர் தினத்தன்று காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்திற்கு ஆளுநர் ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், இந்த புகைப்படம் ஆளுநர் மாளிகை சமூக வலைதள பக்கத்திலும் பகிரப்பட்டு இருந்தது.
ஆளுநரின் இந்த பதிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, அதிமுக எம்.பி தம்பிதுரை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆளுநர், திருவள்ளுவருக்கு காவி பூச முயல்வதாக கண்டித்திருந்தனர்.
இந்நிலையில், மீண்டும் காவி உடை, கழுத்தில் ருத்திராட்சம் அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை ஆளுநர் மாளிகை பயன்படுத்தி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளுவர், வைகாசி அனுஷம் தினத்தில் சென்னை மயிலாப்பூரில் பிறந்ததாக கருதப்படுகிறது. அதனால் இன்றைய தினம் ஒரு தரப்பினரால் திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையில் தான் இன்று ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்படுகிறது. அதேசமயம், தமிழ்நாடு அரசு சார்பில் ஜனவரி 16ஆம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தான் ஆளுநர் மாளிகை திருவள்ளுவர் தினம் கொண்டாடி வருகிறது. திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்திற்கு இன்று மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளார் ஆளுநர் ரவி.
ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடிப்பதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக வழக்கும் தொடர்ந்து உள்ளது.
இவ்வாறாக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாத்தை கிளப்புவதாக அமைந்துள்ளது.
நெற்றியில் விபூதி, காவி! மீண்டும் நிறம் மாறிய திருவள்ளுவர்! ஆரம்பித்த ஆளுநர் ரவி.. திமுக பார்க்குது
இந்நிலையில் ஆளுநர் மாளிகை திருவள்ளுவர் தின அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் இடம்பெற்றதற்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி, “ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது சர்ச்சையை கிளப்பியது. மீண்டும் மீண்டும் ஆளுநர் ரவி, இதே சர்ச்சையை கிளப்பினால் என்னதான் செய்ய முடியும். வாதத்துக்கு மருந்து உண்டு, பிடிவாதத்துக்கு மருந்து கிடையாது. நமக்கு கெட்ட நேரம்.. இதுபோன்ற ஆளுநர் நமக்கு வாய்த்துள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அமைச்சர் ரகுபதி, “லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி 300-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கும், அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications