தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தினால் போராடுவோம்.. அமைச்சர் அன்பில் மகேஷ்!
சென்னை: தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தினால் போராடுவோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு மதிப்பெண்களை வழங்குவது எப்படி என்பது குறித்து முடிவு செய்ய பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் என கூறியுள்ளார். மேலும் நுழைவுத் தேர்வுகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதத்தையும் எழுதியுள்ளார்.

நீட் தேர்வு
அந்த கடிதத்தில் தமிழகத்தில் நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் நீட் போன்ற தேர்வுகள் உகந்ததாக இருக்காது. மாநில கல்வித் திட்டத்தின் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வு
இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டியில் மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

நீட் எதிர்ப்பு
நீட் தேர்வு ஒரே ஒரு நாள் நடைபெறும் தேர்வு என்றாலும் அன்றைய நாள் மூலம் மாணவர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகும் சூழலும் அச்சமும் உள்ளது. எனவே தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தினால் அதை எதிர்த்து போராடுவோம் என தெரிவித்துள்ளார்.

ரத்து செய்ய கோரிக்கை
கடந்த 2017ஆம் ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த தேர்வால் மாணவர்களின் மருத்துவக் கனவு என்பது கானல் நீராகி போகிறது என்பதுதான் அனைத்து கட்சியினர், கல்வியாளர்களின் கோரிக்கையாகும். திமுக ஆட்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications