கோஷம் போட்ட பாஜக தொண்டர்கள்.. ஜீப்பிலிருந்து வேட்டியை மடித்து கட்டி இறங்கிய சேகர்பாபு.. கொடுத்த டோஸ்
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவைப் பார்த்து பாரத் மாதா கி ஜே என்று பாஜக தொண்டர்கள் கோஷமிட்டனர். அவர்களிடம் சேகர்பாபு வந்து, என்ன அரசியல் செய்கிறீர்களா? என்று சத்தம் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில், மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் மூன்று நாட்களாக நேரில் சென்று பார்த்து நிவாரண பணிகளை முடுக்கி விட்டு வருகிறார்.
சென்னையை சேர்ந்தவரும், இந்து சமய அறநிலையத்துறையை அமைச்சருமான சேகர்பாபு ஆரம்பத்தில் முதல்வருடன் ஒரே ஜீப்பில் சுற்றி வந்தார். ஸ்டாலின் பயணித்த ஜீப்பின் பக்கவாட்டில் சேகர்பாபு நின்றபடி பயணம் செய்த காட்சிகள் வீடியோக்களாக வெளியாகி இருந்தன.

வேட்டியை மடித்துக் கட்டி
தற்போது சேகர்பாபு தனியாகவும் ஆய்வுகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில்தான் இன்று முதல்வரோடு, சேகர்பாபு ஜீப்பில் சென்று கொண்டிருந்தபோது சாலை ஓரத்தில் நின்ற பாஜக தொண்டர்கள், "பாரத் மாதா கி ஜெய்" என்று கோஷம் எழுப்பினர். ஜீப் நின்றதும் அதிலிருந்து தடாலடியாக குதித்து வேகவேகமாக அவர்களை நோக்கி வேட்டியை மடித்து கட்டியபடி, நடந்து வந்தார் சேகர்பாபு.

அரசியல் செய்றீங்களா
இதனால் கோஷம் போட்டவர்கள் சத்தம் குறையத் தொடங்கிவிட்டது. அங்கே வந்த சேகர்பாபு என்ன இங்க நின்றுகொண்டு அரசியல் செய்கிறீர்களா என்று ஆவேசமாக கேட்க.. "இல்லண்ணே.. இல்லண்ணே.. அரசியல் செய்யல" என்று கூட்டத்தில் இருந்து பதில் வந்தது.

மனு கொடுக்க
எதுக்காக இங்கே நிற்கிறீர்கள் என்று சேகர் பாபு, கேட்டதும் மனு கொடுப்பதற்கு வந்தோம் என்று பவ்யமாக பாஜக தொண்டர்கள் பதில் சொன்னார்கள். இருப்பினும் அவர்கள் கோஷம் இட்டது மற்றும் நடந்துகொண்ட விதம் அமைச்சர் சேகர் பாபுவை டென்ஷனாகி இருந்ததை அவரது முகத்தில் பார்க்க முடிந்தது.

நான் கொடுத்தால்
எனவே, "நான் மனு கொடுத்தால் தாங்க மாட்டீங்க.." என்று ஆவேசமாக சொன்னார் சேகர்பாபு. "இல்லண்ணே இல்ல" என்று கூட்டத்தில் இருந்து குரல்கள் எழும்பின. முறைத்து பார்த்த சேகர்பாபு , ஒருத்தர் மட்டும் வாங்க என்று சொல்லிவிட்டு திரும்பி சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றிவருகிறது.

அண்ணாமலை வீடியோ
இதனிடையே பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக தொண்டர்களை சேகர்பாபு, மிரட்டியதாக குற்றம் சாட்டி இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
ரஜினிகாந்த் மருமகனுக்கு பெரிய பொறுப்பு.. அப்படியே தூக்கி கொடுக்கும் அண்ணாமலை! விசாகன் வருவாரா? -
மொத்த பார்முலாவையே மாற்றும் அண்ணாமலை.. இதுவரை இல்லாத புதிய திட்டத்தை கையில் எடுக்கிறாரே.. செம -
60,370 வேட்பாளர்கள்.. சக்ரவியூகம்.. அடித்து தூக்கிய அண்ணாமலை.. இதெல்லாம் எதிர்பார்க்காத வேகம் -
அண்ணாமலையுடன் இணையும் மாஜி டிஜிபி.. சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் யார்? -
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்!












Click it and Unblock the Notifications