'என்னுடைய அப்பா' கண்கலங்கி பேசிய மேயர் பிரியா.. உயிருள்ள வரை மகள் தான்.. சேகர்பாபு நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பெரம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா எமோஷனலாக பேசிய வீடியோ இணையத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது. மேயர் பிரியா தனக்கு ஒரு அப்பா மாதிரி என்று சேகர்பாபுவை குறிப்பிட்டதும், சேகர்பாபுவும் தன் மகள் என்று குறிப்பிட்டு பேசியதும் நிகழ்ச்சியை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

என் உயிருள்ள வரை மேயர் பிரியா அவர்களை நிச்சயமாக மகளாகத் தான் பாவிப்பேன் என சேகர்பாபு கூறியிருந்தார்.

Minister Sekar Babu Says Priya Will Always Be Like My Daughter

தமிழகம் முழுக்க பொங்கல் திருநாள் கொண்டாட்டம்

சென்னை பெரம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- என் உயிரினும் மேலான அன்புத் தலைவர் ஸ்டாலின் ஆணைக்கு இணங்க தமிழ்நாடு எங்கும் பொங்கல் திருநாளை கொண்டாடாத பகுதிகளே இல்லை என்று சொல்கிற அளவுக்கு கொண்டாடப்பட்டு வருகிறது.

முதல்வர் ஸ்டாலினிடம் ஆரம்பித்து, துணை முதல்வர், அமைச்சர், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற, மாமன்ற, மண்டல குழு தலைவர், இயக்கத்தில் இருக்கின்ற தலைவர்கள் வரை அனைவரும் எதாவது ஒரு வகையில் பொங்கல் பண்டிகை திருநாளாக கொண்டாடுகின்றார்கள் என்றால் அது திமுகவாக தான் இருக்க முடியும்.

என் உயிருள்ள வரை

தந்தை ஸ்தானத்தில் என்று பிரியா கண்ணீர்மல்க கூறினார். நிச்சயமாக என் உயிருள்ள வரை மேயர் பிரியா அவர்களை மகளாகத் தான் பாவிப்பேன் என்பதை எடுத்துக் கூறி விடைபெறுகின்றேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய மேயர் பிரியா கூறியதாவது:- மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எந்த ஒரு ஏற்பாடுகளை செய்யக் கூறினாலும் துறை சார்ந்து திட்டங்களை முன் வைத்தாலோ இல்லை என்னுடைய தேவைகள் இதுவாக இருக்கிறது என்று தெரிவித்தாலோ தொடர்ந்து எனக்கு தந்தையாக இருந்து அனைத்திலும் உறுதுணையாக இருந்து நீ செய்யுமா..

கண்கலங்கியபடி பேச்சு

என்று சொல்லி ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் எனக்கு துணையாக இருந்து செயல்படுத்தும் சேகர்பாபு அவர்களை அன்புடன் வரவேற்பதாக கூறியிருந்தார். அப்போது அவர் லேசாக கண்கலங்கியபடி பேசினார். இந்த நிலையில் தான் அமைச்சர் சேகர்பாபுவும் தன் மகள் போல பார்ப்பதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+