யார் செய்தது? சட்டென வடபழனி கோவிலுக்குள் சென்ற சேகர் பாபு.. சரமாரி கேள்வி.. இரவே அதிரடி ஆக்சன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திடீரென ஆய்வு செய்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர் பாபு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். முக்கியமாக கோவில்களை சீரமைத்தது, பல்வேறு கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்தது என்று இவரின் செயல்கள் பாராட்டப்பட்டன.

தமிழ்நாடு அமைச்சரவையில் இருக்கும் டாப் அமைச்சர்களில் ஒருவராக சேகர் பாபு பார்க்கப்படுகிறார். இந்த துறையில் இவரின் பணிகள் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே இவருக்கு சிஎம்டிஏ துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஒன்றரை வருடத்தில் பல்வேறு கோவில்கள் புனரமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 சிறப்பு தரிசன முறை

சிறப்பு தரிசன முறை

இந்த நிலையில்தான் தமிழ்நாடு கோவில்களில் சிறப்பு தரிசன முறை பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. அதாவது சிறப்பு தரிசனம் பெயரில் கூடுதல் பணம் கொடுத்து வழிபாடு செய்யும் முறை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த முறையை கைவிட வேண்டும். கோவில்களில் எல்லோரும் சமம் என்ற நிலை வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. அதோடு இந்த சிறப்பு தரிசன முறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

கோவில் ஊழியர்கள்

கோவில் ஊழியர்கள்

அதாவது கோவில் ஊழியர்கள் அதிக பணம் வாங்கிக்கொண்டு விஐபிக்களை கோவில் உள்ளே விடுகிறார்கள். இது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்த நிலையில்தான் கோயில்களில் சிறப்பு தரிசன கட்டணம் முறை கைவிடப்படும். இந்த முறை படிப்படியாக குறைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக சிறப்பு தரிசன கட்டணம் விலை குறைக்கப்படும்.

பொருளாதார சூழல்

பொருளாதார சூழல்

பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு சிறப்பு தரிசன கட்டணத்தை குறைக்க முடிவு செய்து உள்ளோம். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக இந்த முறையை கைவிடுவோம் என்றும் அமைச்சர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்தான் வடபழனி கோவிலில் தரிசன டிக்கெட் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்று போது இந்த சம்பவம் நடந்துள்ளது. நீதிபதி என்று சொல்லாமல் இவர் சாதாரண தரிசன டிக்கெட்டை எடுத்துள்ளார்.

3 டிக்கெட்

3 டிக்கெட்

குடும்பத்துடன் சென்ற அவர் 3 டிக்கெட்டுகளை வாங்கி உள்ளார். ஒரு டிக்கெட் விலை 50 ரூபாய். எனவே இவருக்கு 3 டிக்கெட்டுகளை 150 ரூபாய் மதிப்பிற்கு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அவரிடம் இரண்டு 50 ரூபாய் டிக்கெட்டுகளை கொடுத்துள்ளனர். கூடுதலாக 5 ரூபாய் டிக்கெட் ஒன்றை கொடுத்துள்ளனர். இதன் மூலம் 45 ரூபாய் அரசு கணக்கில் செல்லாமல், ஊழியரின் பாக்கெட்டிற்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது பற்றி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கோயில் ஊழியரிடம் கேள்வி எழுப்பியதற்கு, ஊழியர் மழுப்பலாக பதில் சொல்லி இருக்கிறார்.

நீதிபதி விசாரணை

நீதிபதி விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் புகார் அளிக்கவே 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலையில்தான் சென்னை வடபழனி ஆண்டவர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திடீரென ஆய்வு செய்து அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். நேற்று இரவு திடீரென கோவிலுக்கு சென்ற சேகர் பாபு அங்கு அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டார். கோவில் ஊழியர்களிடம் முறைகேடு குறித்து கேட்டறிந்தார்.. எங்கே தவறு நடந்தது.. யார் செய்தது.. எத்தனை நாட்களாக நடக்கிறது என்று விசாரித்தார். அதை தொடர்ந்து தரிசன டிக்கெட் விற்பனை செய்யும் ரேவதி, தரிசன டிக்கெட் சரி பார்த்து பக்தர்களை அனுப்பும் ஊழியர் சின்னத்தம்பி ஆகிய இருவர் பணியிடை நீக்கம். செய்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+