வேட்டி சூப்பரா கட்டிருக்கேள்! சாமி பேரை நீங்க வச்சுக்கிட்டா எப்டி?குட்டி பூசாரியை கலாய்த்த சேகர்பாபு

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை ஆவடியில் கோ சாலை அமைய உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அங்கிருந்த அர்ச்சகராக இருந்த சிறுவனிடம் சாமி பெயரை வைத்துக் கொண்டால் அப்பறம் எப்படி என கிண்டலடித்தார்.

Recommended Video

    வேட்டி சூப்பரா கட்டிருக்கேள்! சாமி பேரை நீங்க வச்சுக்கிட்டா எப்டி?குட்டி பூசாரியை கலாய்த்த சேகர்பாபு

    தமிழக சட்ட சபையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கோவில் பதாகையில் 25 ஏக்கர் நிலத்தில் 20 கோடி மதிப்பில் கோ சாலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

    இதனை தொடர்ந்து இன்று ஆவடி கோவில் பதாகையில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை சுந்தரராஜ பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு,தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

    அமைச்சர் சேகர்பாபு

    அமைச்சர் சேகர்பாபு

    மேலும் அக்கோவில் ஆய்வு மேற்கொண்டனர்.இதன் பின்னர் கோ சாலை அமைக்க சுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடம் 25 ஏக்கர் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள சில ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனடியாக பணிகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    கோவிலில் ஆய்வு

    கோவிலில் ஆய்வு

    இதனையடுத்து திருமுல்லைவாயல் பச்சையம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார் அதனை தொடர்ந்து பச்சையம்மன் கோவில் எதிரில் உள்ள தாமரை குளம் தூர்வாரும் பணியை ஆய்வு செய்து கரைகளை பலப்படுத்த கூறினார்.மேலும் குளம் தூர் வரும்போது கிடைக்கப்பட்ட சிலையை பார்வையிட்டார்.

    சிறுவனிடம் கலகலப்பு

    சிறுவனிடம் கலகலப்பு

    முன்னதாக சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொள்ளும்போது அங்கு பூஜை செய்யும் சிறுவனிடம் கலந்துரைத்தாடிய அமைச்சர் சேகர்பாபு சிறுவனிடம் சாமி ஸ்கூலுக்கு போறது இல்லையா என கேட்டார். அதற்கு சிறுவன் Exam முடிந்து விடுமுறை என பதிலளித்தார்.

    சிரிப்பலை

    சிரிப்பலை

    அவனிடம் பெயரினை கேட்க சிறுவன் வேங்கட நரசிம்மன் என கூறினான்.அதற்கு அமைச்சர் சாமி பெயரை வைத்துக் கொண்டால் அப்பறம் எப்படி என கிண்டலடித்தார்.பின்னர் சூப்பரா கட்டிருக்க வேஷ்டினு சொல்லி அங்கிருந்து கிளம்பினார். இதனால் அங்கு சிறிது சிரிப்பலை எழுந்தது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+