அசத்தல்.. தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு கட்டணத்தில் 60% வழங்கப்படும்: சேகர் பாபு அதிரடி
சென்னை: கோவில்களில் தமிழ் அர்ச்சணையை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதேபோல் கோவில்களில் தமிழில் அர்ச்சணை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சணை கட்டணத்தில் 60% வழங்கப்படும் என்ற பெரிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
கோவில்களில் தமிழ் அர்ச்சணையை ஊக்குவிக்கும் பொருட்டு அமைச்சர் சேகர்பாபு முன்னெடுக்கும் இந்த நடவடிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை இன்று தமிழக சட்டசபையில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய அந்த துறையின் அமைச்சர் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதாவது, கோவில்களில் தமிழ் அர்ச்சணையை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தமிழில் அர்ச்சணை செய்யும் அர்ச்சகர்களுக்கு அர்ச்சணை கட்டணத்தில் 60% வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார்.

5 சிவாலயங்கள்
இதேபோல் 5 சிவாலயங்கள் சார்பாக இனி மஹா சிவராத்திரி விழா நடத்தப்படும் என்றும் தமிழகம் முழுவதும் 121 கோவில்களில் ரூ.20 கோடி மதிப்பில் பசுமடங்கள் மேம்படுத்தப்படும் என அறிவித்திருக்கிறார். மேலும், முதற்கட்டமாக 8 கோவில்களில் யானைகளுக்கான குளியல் தொட்டிகள் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்படும் என்றும் பழனி மலைக்கும் இடும்பன் மலைக்கும் இடையே கம்பிவட ஊர்தி அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

அன்னாதனத் திட்டம்
10 முக்கியக் கோவில்களில் அன்னதானத் திட்டம் புதிதாக தொடங்கப்படும் என்றும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே ஐந்து கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை மீனாட்சியம்மன் கோவில்களிலும் அது நடைமுறைப்படுத்தப்படும் என முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மருத்துவ மையங்கள்
தமிழகத்தில் அதிகளவில் பக்தர்கள் வருகை புரியும் 10 திருக்கோவில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் பழனி கோவிலுக்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரத்தின் போது பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 10,000 நபர்கள் வீதம் இருபது நாட்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications