முறைகேடா? யார் சொன்னது? டாஸ்மாக் பார் டெண்டர் ஒளிவுமறைவு இன்றி நடக்கிறது.. செந்தில் பாலாஜி விளக்கம்
சென்னை: டாஸ்மாக் பார் டெண்டர் ஒளிவுமறைவு இன்றி நடக்கிறது. விதிமுறைகளை கடைபிடித்தால் டெண்டர் வழங்கப்படும். இதில் எந்த தவறும் நடக்கவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.
இன்று சென்னையில் மின்சாரத் துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டின் முன்பு பார் உரிமையாளர்கள் பலர் கூடி இன்று போராட்டம் நடத்தினர். பார் உரிமம் டெண்டர் வழங்குவதில் முறைகேடு நடந்துவிட்டதாக கூறி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு நெருக்கமான சிலருக்கு டெண்டர் வழங்கியதாக பார் உரிமையாளர்கள் புகார் வைத்துள்ளனர். தங்களிடம் ஏற்கனவே இருந்த பார் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று போராட்டம் நடத்திய பார் உரிமையாளர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
இந்த போராட்டத்திற்கு பின்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, டெண்டர் வழங்க வந்த யாரையும் நாங்கள் நிராகரிக்கவில்லை. எந்த அரசியல் கட்சிக்கும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. யாரெல்லாம் முறையாக படிவங்களை அனுப்பி உள்ளார்களோ அவர்களை ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆன்லைனிலும், நேரிலும் முறையாக டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

பார் டெண்டர்
டெண்டர் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என்று யாராவது கூறினார்களா?. எங்காவது யாராவது புகார் அளித்தனரா? டாஸ்மாக் பார் டெண்டர் ஒளிவுமறைவு இன்றி நடக்கிறது. விதிமுறைகளை கடைபிடித்தால் டெண்டர் வழங்கப்படும். இதில் எந்த தவறும் நடக்கவில்லை.

அமைச்சர் செந்தில் பாலாஜி பார்
தமிழ்நாட்டில் பார் நடத்த வசதி உள்ள 1550 டாஸ்மாக்கிற்கு டெண்டர் விடப்பட்டது. கொரோனா காலம் என்பதால் கூடுதலாக 2 விதிகள் அமல்படுத்தப்பட்டது. மொத்தமாக 68 விதிகள் பின்பற்றப்பட்டுள்ளது. எந்த இடங்களில் விண்ணப்பங்களை வாங்க மறுத்துள்ளனர் என்று கூறுங்கள். நான் நடவடிக்கை எடுக்கிறேன்.. அப்படி எந்த புகாரும் வரவில்லை.

பார் நிர்வாகிகள் போராட்டம்
சில இடங்களில் 2 பெட்டி வைத்து இருப்பதாக பார் உரிமையாளர்கள் என்னிடம் கூறினார்கள். எல்லோருக்கும் முன்பாகத்தான் அதிகாரிகள். டெண்டரை வெளிப்படையாக திறந்து படித்துள்ளார். என்ன தொகைக்கு டெண்டர் கேட்டுள்ளார் என்று வெளிப்படையாக கேட்டுள்ளனர். அப்படி இருக்கும் போது இதில் முறைகேடு நடந்து இருக்க முடியும்?

பார் டெண்டர்
இந்த வருடம் 11715 டாஸ்மாக் பார் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருக்கின்றன. கடந்த வருடம் 6482 டாஸ்மாக் பார் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த ஒப்பந்தம் வெளிப்படையாக நடந்தது என்பதற்கு இதுவே மிகப்பெரிய உதாரணம், என்று அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications