ராஜினாமாவை தவிர வேறு வழியில்லை? செந்தில் எடுத்த முடிவு? மனசை உடைய வைத்த காரணம்.. என்ன நடந்தது?
சென்னை: அமைச்சரா? ஜாமீனா? இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் கெடு விதித்த உத்தரவு செந்தில்பாலாஜியை மட்டுமல்ல; முதல்வர் ஸ்டாலினையும் மிகவும் பாதித்துள்ளது. நேற்று சட்டப்பேரவைக்கு செந்தில் பாலாஜி வரவில்லை.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அமலாக்கத் துறை ரெய்டு நடத்தப்பட்டு அவர் மோசடி செய்ததற்காக முகாந்திரம் இருப்பதாக கூறி அவர் கைது செய்யப்பட்டார்.
இதில் சிறை சென்றவர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கழித்தே வெளியே வந்தார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்பே அவருக்கு ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் வந்தது. ஏனென்றால் இவர் அமைச்சராக தொடர கூடாது என்று அமலாக்கத்துறை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைத்தது. புழல் சிறையில் ஒரு ஆண்டுக்கு மேல் இருந்த அவர் கடந்த ஆண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து அவர் ஓரிரு நாளில் மீண்டும் பவர்ஃபுல்லான மின்சாரத் துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

மீண்டும் வழக்கு
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி போக்குவரத்து துறையில் வேலைக்காக பணம் கொடுத்தவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் அவர் அமைச்சராக மீண்டும் பதவியில் ஏற்றத்தை எதிர்த்து வாதங்கள் வைக்கப்பட்டன. அவர் அமைச்சராக இருப்பதால் சாட்சிகள் கலைக்கப்படலாம் என்று வாதங்கள் வைக்கப்பட்டன.
இந்த நிலையில்தான் அமைச்சரா? ஜாமீனா? இரண்டில் ஒன்றை தேர்வு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் கெடு விதித்த உத்தரவு செந்தில்பாலாஜியை மட்டுமல்ல ; முதல்வர் ஸ்டாலினையும் மிகவும் பாதித்துள்ளது. நேற்று சட்டப்பேரவைக்கு செந்தில் பாலாஜி வரவில்லை.
செந்தில் பாலாஜி ஆலோசனை
மாறாக, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்தபடி இருந்தார் செந்தில் பாலாஜி. அவரிடம் விவாதித்த சட்ட நிபுணர்கள், ''இதில் மாற்றி யோசிக்க ஏதுமில்லை சார். ரிசைன் பண்ணுவதைத் தாண்டி நீதிமன்றத்தின் கோபத்தை மாற்ற வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை'' என்று சொல்லியிருக்கிறார்கள்.
உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும் சீனியர் கவுன்சில்களும், ரிசைன் பண்ணச் சொல்லியே யோசனை தெரிவித்திருக்கிறார்கள். அதனால், மாற்று வழி யோசித்து யோசித்து டயர்ட் ஆகிவிட்டாராம் செந்தில்பாலாஜி.
சென்னைக்கு திரும்பும் ஆளுநர்
இந்த நிலையில், கட்சிக்கும் தலைவருக்கும் தன்னால் நெருக்கடி உருவாக வேண்டும் என யோசித்து ரிசைன் பண்ணும் முடிவுக்கு வந்துள்ளதாகவும், இன்று ஸ்டாலினை செந்தில்பாலாஜி சந்தித்து பேசியப்பிறகு இதில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. அமைச்சரவை மாற்றம் இருப்பதால், அதனை கவர்னருக்கு தெரிவிக்க வேண்டும். துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு விட்டு 27-ந்தேதி சென்னைக்கு ஆளுநர் ரவி திரும்புவார். அன்றைக்கு அமைச்சரவை மாற்றத்திற்கான கோப்பினை முதல்வர் தரப்பிலிருந்து அனுப்பி வைக்கப்படலாம் என்றும் கோட்டையில் உலா வருகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications