சர்ஜரிக்கு தயாரானது செந்தில்பாலாஜி உடல்நிலை.. நாளை காலையில் அறுவை சிகிச்சை - அமைச்சர் மா.சு தகவல்!
சென்னை: காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை காலை இதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்ற உத்தரவுப்படி தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருதய நோய் சிறப்பு நிபுணர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்தில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு நாளை (ஜூன் 21) பைபாஸ் சர்ஜரி செய்ய காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜியின் இதயத்திற்குச் செல்லக்கூடிய 3 ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சைக்கான அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அமைச்சர் செந்தில் பாலாஜி இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் 3 முக்கியமான அடைப்புகள் இருந்தது கண்டறியப்பட்டு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் குழு பரிந்துரைத்தது.
காவேரி மருத்துவனையில் செந்தில் பாலாஜிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட உயிர்காக்கும் சிகிச்சையின்போது ரத்த ஓட்ட அடைப்பை சரி செய்ய அளிக்கப்பட்ட மருந்துகள் நிறுத்தப்பட்டு சில நாட்களுக்குப் பிறகுதான் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் அறுவை சிகிச்சை தள்ளி வைக்கப்பட்டது.
செந்தில் பாலாஜிக்கு நாளை காலை பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளனர். அறுவை சிகிச்சை செய்வதற்கான உடல் தகுதியை நேற்று இரவு பெற்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அறுவை சிகிச்சைக்கு செந்தில் பாலாஜியின் உடல்நிலை தயாராகி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்." எனத் தெரிவித்துள்ளார்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications